scorecardresearch

தமிழ்நாடு – சௌராஷ்டிரா உறவைக் கொண்டாடும் புத்தகம்; விரைவில் வெளியீடு

நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் முன் வந்து, சௌராஷ்டிர தமிழ் சங்கமத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு பங்களித்து வருகின்றனர்

saurashtra-tamil
ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கல்வித் துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

சௌராஷ்டிரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவைக் கொண்டாடும் ஒரு புத்தகமாக “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்திஹ்” என்ற புத்தகம் வெரவலில் உள்ள ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட உள்ளது.

‘சோமநாத் – ராமேஸ்வரம் சங்கம் அஷ்டகம்’, என்ற சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான வரலாற்று உறவுகளைக் கொண்டாடும் வசனங்களின் தொகுப்பு, பல்கலைக்கழகத்தால் இயற்றப்பட்டுள்ளது. இது “ராமேஸ்வரம் மற்றும் சோம்நாத் ஆகிய இரண்டு புனித ஸ்தலங்களின் புனிதமான சங்கமத்தின் வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சௌராஷ்டிர தமிழ்ச் சங்கத்தின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் குறித்துப் புகழ்பெற்ற கவிஞர்களின் படைப்புகளின் கலவையாக இந்தப் புத்தகம் உள்ளது, இது கலாச்சாரத் தொடர்பை எடுத்துக்காட்டும் அரசாங்க முயற்சியாகும். இப்பாடல்களில் இருந்து சிறந்த வசனங்கள் ‘சௌராஷ்ட்ர-தமிழ் சங்கம்பிரஷஸ்தி’ புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன்; சில தியாகங்கள் அவசியம்; முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி

“கலைஞர்கள் மற்றும் கவிதை அறிஞர்களின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை வாசகர்கள் அனுபவிக்கவும், முக்கியமான சௌராஷ்டிர தமிழ் சங்கத்தின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இந்த புத்தகம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்” என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது. புத்தக வெளியீட்டு தேதியை அறிக்கை வெளியிடவில்லை.

ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கல்வித் துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவிதையை ஒரு தகவல்தொடர்பு ஊடகமாக பயன்படுத்தி, நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் முன் வந்து, சௌராஷ்டிர தமிழ் சங்கமத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு பங்களித்து வருகின்றனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையேயான வரலாற்று உறவுகள் 50 ஆண்டுகள் பழமையானது, அந்த மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க ‘சௌராஷ்டிர தமிழ் சங்கம்’ போன்ற முயற்சிகள் உதவுகின்றன. ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழக அறிஞர்களின் முயற்சிகள் இந்த கருத்தை மேம்படுத்துவதோடு, மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளின் பெருமையை உலகம் காண உதவும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Book on saurashtra and tamil nadu link set to be launched soon