பூஸ்டர் டோஸ் முதல் இரண்டு தடுப்பூசியாக இல்லாமல் புதியதாக இருக்கும் – உயர்மட்ட நிபுணர் குழு தகவல்

உலகெங்கிலும் உள்ள பல நிபுணர் அமைப்புகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸ்களாக பரிந்துரைத்துள்ளன.

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவெடுக்கும் பட்சத்தில், அது முதல் இரண்டு டோஸ்களில் இருந்து வேறுபட்ட தளத்தை அடிப்படையாக கொண்ட தடுப்பூசியாக இருக்க வேண்டும் என உயர்மட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நாடுகளில் ஒமிக்ரான அச்சத்தால் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், அதனை இந்தியாவில் செயல்படுத்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை.

நோய்த்தடுப்புக் கொள்கை மற்றும் திட்டங்களின் அறிவியல் சான்றுகளின் தொழில்நுட்ப மதிப்பாய்வுக்குப் பிறகு, தடுப்பூசி வழிகாட்டுதலை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கும் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) இன்னும் பூஸ்டர் குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், செயலிழந்த முழு வைரஸ் அல்லது அடினோவைரல் வெக்டர் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பயனாளிக்கு மூன்றாவது டோஸ் வேறு தளத்தின் அடிப்படையிலான தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் செயலிழந்த வைரஸ் தடுப்பூசி ஆகும். அதேபோல், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்ட் மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் V ஆகியவை அடினோவைரஸ் அடிப்படையிலான தடுப்பூசிகள் ஆகும்.

எனவே, பயனாளிக்கு பூஸ்டர் டோஸ் கொடுக்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்டுள்ள தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸாக இருக்க முடியாது என ஆய்வறிக்கை கூறுகிறது.

கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் போன்ற ‘வைரல் வெக்டர்’ தடுப்பூசிகள், வைரஸின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்துகின்றன. வைரஸின் மாற்றமானது, அது நகலெடுக்க முடியாது என்பதையும், தடுப்பூசி பெறுபவரை நோய்வாய்ப்படுத்த முடியாது என்பதையும் உறுதி செய்கிறது.

கோவாக்சின் ஒரு செயலிழந்த அல்லது ‘இறந்த’ வைரஸைப் பயன்படுத்துகிறது, அது யாரையும் பாதிக்காது, ஆனால் நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க வழிவகுக்கிறது.

எவ்வாறாயினும், NTAGI இன்னும் அரசாங்கத்திற்கு முறையான பரிந்துரையை வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை பூஸ்டருக்கான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், Covishield, Covaxin அல்லது Sputnik மூலம் தடுப்பூசி போடப்பட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வரும் மாதங்களில் வெவ்வேறு வகையான தடுப்பூசிகள் வரிசையில் காத்திருக்கின்றன.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் Corbevax தடுப்பூசி, புரத துணை யூனிட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது செயலிழந்த முழு-செல் தடுப்பூசிகளிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில், நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வைரஸின் ஆன்டிஜெனிக் பாகங்களை மட்டுமே பயன்படுத்துகிறது. ஏற்கனவே, 30 கோடி டோஸ் Corbevax தடுப்பூசி பெற, மத்திய அரசு சார்பில் முன்பணமாக 1500 கோடி வழங்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசிக்கு அடுத்த இரண்டு வாரங்களில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

மூன்றாவது டோஸிற்கான இரண்டாவது சாய்ஸ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவோவாக்ஸ் தடுப்பூசி ஆகும். இது மறுசீரமைப்பு நானோ துகள்கள் புரத அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் இன் இன்ட்ராநேசல் தடுப்பூசி பூஸ்டருக்கான மூன்றாவது சாய்ஸ் ஆகும். நாசி வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பூசி ஜனவரி இரண்டாம் பாதியில் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

நான்காவது சாய்ஸ் இந்தியாவின் முதல் mRNA கோவிட்-19 தடுப்பூசியாக இருக்கலாம், இது புனேவை தளமாகக் கொண்ட Gennova Biopharmaceuticals Ltd ஆல் உருவாக்கப்பட்டது. ஜென்னோவா 6 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைசர் மற்றும் மாடர்னாவால் உருவாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் போலல்லாமல், இந்த தடுப்பூசிக்கு தீவிர குளிர் சேமிப்பு தேவையில்லை. இதனை 2-8 டிகிரி செல்சியஸில் சேமிக்க முடியும்.

உலகெங்கிலும் உள்ள பல நிபுணர் அமைப்புகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸ்களாக பரிந்துரைத்துள்ளன. செப்டம்பரில், Covid-19 தடுப்பூசிகளின் பல்வேறு சேர்க்கைகளின் பூஸ்டர் தரவுகளை மதிப்பாய்வு செய்து, இங்கிலாந்தின் நிபுணர் அமைப்பு Pfizer இன் mRNA தடுப்பூசியை பூஸ்டராக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

என்ன தடுப்பூசி பூஸ்டராக வரும்

நீங்கள் Covishield, Covaxin அல்லது Sputnik எடுத்திருந்தால், உங்களுடைய மூன்றாவது ஷாட் இவற்றில் எதுவாகவும் இருக்க முடியாது. அதற்கு பதிலாக, Corbevax, Covovax, intranasal தடுப்பூசி அல்லது இந்தியாவின் முதல் mRNA ஷாட் இவற்றில் எதாவது ஒன்று வரும் வாரங்களில் அங்கீகரிக்கப்பட்டு பூஸ்டராக செலுத்தப்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Booster must be different vaccine view in top expert body

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com