Stop unilateral construction of roads Nepal tells India : காளி ஆறுக்கு கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பகுதியில் சாலைகள் கட்டும் இந்தியாவை, ஒரு தலைபட்சமாக செயல்பட வேண்டாம் என்றும் சாலைகள் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் நேபாளம் ஞாயிறு அன்று கோரிக்கை வைத்துள்ளது. மேற்கொண்டு அரசாங்க ரீதியாக முறையான எதிர்ப்பை வெளியிடவில்லை.
நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று உரிமை கோரும் லிபுலேக் பகுதி முழுவதும் சாலை அமைக்கும் பணிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளது நேபாளம். டிசம்பர் 30 அன்று உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானியில் பாஜக ஏற்பாடு செய்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய மோடி, உத்தரகாண்டில் உள்ள லிபுலேக்கில் கட்டப்பட்ட சாலையை தனது அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான ஞானேந்திர பகதூர் கார்க்கி கூறுகையில், லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காளி நதியின் கிழக்கே காலாபானி உள்ளிட்ட பகுதிகள் நேபாளத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதில் சாலைகள் அமைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான எல்லைப் பிரச்சனைகள் அனைத்தும் முறையாக வரலாற்று ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும் என்றும் கார்க்கி கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகள் அனைத்தும் இந்திய பகுதிகளில் தான் நடைபெற்று வருகிறது என்று இந்தியா வலியுறுத்திய கூறிய பிறகு ஒரே நாளில் மேற்கண்டவாறு நேபாளத்தின் பதில் கிடைக்கப்பெற்றது. மேலும் இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலமாக இத்தகைய சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், சனிக்கிழமை அன்று, நேபாளாத்துடனான இந்தியாவின் எல்லை நிலைப்பாட்டினை இந்தியா தெளிவாக, நிலையாக புரிந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்திய எல்லை விவகாரம் குறித்து நேபாளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த இந்திய தூதரகம், இந்தியா-நேபாள எல்லையில் இந்திய அரசின் நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதாகவும், நிலையானதாகவும் உள்ளது. இது தொடர்பாக நேபாள அரசிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான பரஸ்பர உறவில் ஒன்றரை வருடங்கள் கழித்து ஒரு சிறு சருக்கல் ஏற்பட்டுள்ளது. நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தெயூபா வைப்ரண்ட் குஜராத் மாநாட்டிற்கு வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கோவிட்-19 பரவல் காரணமாக உச்சிமாநாடு ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், அவருக்கு சிவப்பு கம்பள சிகிச்சை கிடைத்திருக்கும். தேர்தல் நேரத்தின் போது தற்போது புதிய திருப்பம் இருநாட்டு உறவுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் உத்தரகாண்ட் பகுதியில் உள்ள லிபூலேக் பகுதியில் சாலைகள் மேம்பாட்டு பணிகளுக்கான தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டார். இது நேபாளத்தில் பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது. இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த புயலை சாந்தப்படுத்துவது இந்திய தூதுவர் வினய் மோகன் க்வாத்ராவிற்கு கடுமையான சவாலாக இருக்கும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil