/tamil-ie/media/media_files/uploads/2021/04/DELHI-COVID-16.jpg)
கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆளாகி உயிரிழந்த தந்தையை நினைத்து வருந்தும் பிள்ளைகள்
Centre points surge states to UK example : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் என்ற உச்சத்தை எட்டியது. டெல்லி வார இறுதியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கும் மற்றொரு மாநிலமாகும். கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு தருணங்களில் மாநில அரசுகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும், அதிக அளவில் தடுப்பூசிகளை போட வேண்டும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மருத்துவ பணியாளர்களை அழைத்து வந்து, உள்ளூர் மருத்துவ நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கொரோனா நிலையை மேற்பார்வையிடும் குழுவின் அரசு தரப்பு அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, இங்கிலாந்தில் அதிக அளவு கொரோனா தடுப்பூசியுடன் சேர்த்து புதிய பிறழ்வு ஏற்பட்ட போது ஊரடங்கையும் டிசம்பரில் அறிவித்தது. அதே போன்ற திட்டத்தை நடைமுறைத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்தியா தற்போது நுண் கட்டுப்பாட்டு முறைகளையே பின்பற்ற விழைகிறது. முழுமையான ஊரடங்கிற்கு பதிலாக உள்ளூர் மக்கள் நடமாட்டத்தை குறைக்க முயன்று வருகிறது.
தடுப்பூசியை அதிகரித்து வரும் சூழலில் கொரோனா கடுப்பாடுகள், சோதனை, தடம் அறிதல் போன்றவற்றை குறைக்கும் போது ஆபத்து அதிகரிக்கிறது. கொரோனா தொற்று அதிகரிக்கும் போது, முதல் ஷாட் மற்றும் பெற்ற நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அர்த்தமுள்ள முடிவுகளை பெற இயலாது என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்
6.6 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் அங்கு நோய் தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது மிகவும் தவறான கதை. அங்கு கொரோனா மட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு காரணம், அங்குள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கடுமையான ஊரடங்கினை நடைமுறைப்படுத்திய பிறகு வழங்கப்பட்டது. அதனால் அது கட்டுக்குள் உள்ளது. ஊரடங்கு இல்லாத போது நீங்கள் நுண் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும். மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் மேலும் மக்களுக்கு அதிக அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ் பூஷன் வியாழக்கிழமை நடத்திய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மத்திய பிரதேசத்தின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினர் அதில் தேவையின்றி நடமாடும் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் சமூக கூட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் கூறியது. குறிப்பாக நகர் புற பகுதிகளில் இவை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இரண்டாம் அலைக்கு எதிராக போரிடும் முன்கள பணியாளர்கள் மிகவும் அயர்ச்சியாக உள்ளனர். மருத்துவர்களும் செவிலியர்களும் மிகுந்த களைப்பிற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளோம். தேசிய சுகாதார மிஷனில் இருக்கும் நிதியை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை கொண்டு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒருவருட ஒப்பந்தத்தில் பணியில் அமர்த்தியுள்ளனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள செவிலியர்கள் அங்கே பணியாற்றுகின்றனர். பெரிய மாநிலங்களும் இதை பின்பற்றுகின்றன என்று மத்திய அரசு கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை சுவாசத்திற்கான ஆக்ஸிஜனை பெறுவதற்கு மத்திய அரசு அதிக கொரோனா தொற்றுகளை கொண்ட மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை மேப்பிங் செய்வதாக கூறியுள்ளது.
ஏப்ரல் 20, ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 30 போன்ற தேதிகளில் இந்த மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவு முறையே 4880 மெட்ரிக் டன், 5619 மெட்ரிக் டன் மற்றும் 6593 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் படிக்க : அதிக பாதிப்பை ஏற்படுத்துமா கொரோனாவின் B.1.617 மாதிரி?
50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய டெண்டர் தரப்படும். "டெண்டரை இறுதி செய்ய MOHFW க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் எம்.இ.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்டிருக்கும் இறக்குமதிக்கான ஆதாரங்களையும் ஆய்வு செய்யுங்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் 162 பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பி.எஸ்.ஏ) ஆலைகளை 100% விரைவில் முடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. PSA ஆலைகளை நிறுவுவதற்கான அனுமதியைக் கருத்தில் கொண்டு தொலைதூர இடங்களில் உள்ள மேலும் 100 மருத்துவமனைகளை அடையாளம் காண அதிகார குழு 2 MoHFW க்கு அறிவுறுத்தியது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
உற்பத்தி திறனையும் தாண்டி அதிக அளவு தேவை இருக்கின்ற மகாராஷ்ட்ரா தங்களின் ஆக்ஸிஜன் தேவைக்காக தினமும் டோல்வியில் உள்ள எஃகு ஆலை, சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள செய்ல் நிறுவனம் மற்றும் பெல்லாரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. மத்திய பிரதேசம் தங்களின் ஆக்ஸிஜன் தேவைக்கு பிலாய் ஆலையை நம்பியுள்ளது.
ரயில்கள் மூலமாகவும் சாலைகள் வழியாகவும் ஆக்ஸிஜனை விநியோகிக்கும் முடிவு குறித்து சிந்தித்து வருகிறது மத்திய அரசு. இதற்கிடையில், வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கான தாராளமய ஒழுங்குமுறை ஒப்புதல் குறித்து அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பதிவு சான்றிதழ் மற்றும் இறக்குமதி உரிமத்திற்கான விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.