36 ரபேல் போர் விமானங்கள் வாங்கவே ஒப்புதல் - நிர்மலா சீதாராமன்

இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அளித்த சிறப்புப் பேட்டி

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்திருக்கும் பிரத்யேகப் பேட்டியில் ரபேல் போர் விமானங்கள் குறித்து குறிப்பிட்டு பேசியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு மத்திய அமைச்சகம் ஃப்ரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஒவ்வொரு முறையும் 18 அடி கொண்டிருக்கும் ஸ்குவாட்ரான் விமானத்தினை இயக்க அதிக பாராமீட்டர்கள் கணக்கில் கொள்ளப்படும். அந்த கணக்கீட்டின் படி நமக்கு 2 ஸ்குவாட்ரான் மட்டுமே போதுமானதாக இருக்கும். இரண்டும் பறக் கும் தருவாயில் இருக்கும். மற்ற அனைத்து ஸ்குவாட்ரான்களையும் உருவாக்க நிறைய ஆயுதங்கள் மற்றும் நேரம் அதிகமாக இருக்கும் என்று ரபேல் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து முதல் முறையாக பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அப்போது ஒரு ரபேல் போர் விமானத்தின் விலைப்பற்றி கேட்ட போது, அடிப்படை ரபேலின் விலை (பாராளுமன்றத்தில் கூறப்பட்ட ) ரூ. 670 கோடி ஆகும் என்று கூறினார்.

இந்த ரபேல் விமானங்களைத் தயாரிக்கும் பிரெஞ்ச் நிறுவனமான டஸ்ஸல்ட், விமானங்களுக்குத் தேவையான ஆப்செட் பாகங்களை தயாரிப்பதற்கு ரிலையன்ஸ் டிஃபென்ஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அளித்திருக்கிறது என்று கூறினார் நிர்மலா. மேலும் இந்த போர் விமான ஒப்பந்தகள் யாவும் சரியான முறையில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

டஸ்ஸல்ட் பற்றி நிர்மலா சீதாராமன்

டஸ்ஸல்ட் நிறுவனம் ரிலையன்ஸ்ஸை தேர்வு செய்தது குறித்து பேசிய போது “இது தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யப்பட்டதாகும். இது குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றுமே இல்லை. 70 பாட்னர்களில் ரிலையன்ஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்றும், என்ன உதிரி பாகங்களை தயாரிக்கிறது” என்பது குறித்து எனக்கு தெரியாது என்று குறிப்பிட்டார்.

அதானியின் குழுமத்துடன் இணைந்து ரஷ்யா ரைபில்கள் தயாரிப்பதற்கு இந்திய அரசு தடை செய்திருப்பது குறித்தும் பேசினார் நிர்மலா.

வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் தயாரிக்க இந்தியாவில் இருக்கும் ஆர்டன்ஸ் பேக்ட்ரி போர்ட் குழுமத்தை அணுகலாம். இந்திய அரசாங்கம் துப்பாக்கிகளை உருவாக்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால் தான் இதனைக் கூறுகிறேன் என்றும் கூறினார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் நேபாளத்தின் ராணுவ தளபதி பங்கு கொள்ளாததைப் பற்றியும் அமெரிக்காவுடனான பெகா ஒப்பந்தம் பற்றியும் விரிவாக பேசினார் நிர்மலா.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close