Advertisment

EWS இடஒதுக்கீட்டில் வொக்கலிகர், லிங்காயத்துகளுக்கு 6% ஒதுக்கீடு; கர்நாடக அரசுக்கு பிராமணர்கள் எதிர்ப்பு

அகில கர்நாடக பிராமண மகாசபை பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ள நிலையில், இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களுடன் விவாதிப்பதாக பிராமண சமூகத்திற்கு பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Karnataka, Karnataka EWS quota, Karnataka government, BJP, Karnataka Economically Weaker Section quota, கர்நாடகா, இடஒதுக்கீடு, லிங்காயத்துகள், வொக்கலிகர்கள், பிராமணர்கள், Karnataka Vokkaligas, Karnataka Lingayats, Karnataka Brahmins, Akhila Karnataka Brahmin Mahasabha, Basavaraj Bommai

அகில கர்நாடக பிராமண மகாசபை பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ள நிலையில், இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களுடன் விவாதிப்பதாக பிராமண சமூகத்திற்கு பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.

Advertisment

கர்நாடக மாநிலத்தின் இரண்டு ஆதிக்க சாதிகளான வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு இடையே 10 சதவீத பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டில் 6 சதவீதத்தை உள்ஒதுக்கீடு செய்வதற்கான பா.ஜ.க தலைமையிலான கர்நாடக அரசின் சமீபத்திய பரிந்துரை உயர் சாதி பிராமண சமூகத்தை வருத்தப்படுத்தியுள்ளது. இதை அகில கர்நாடக பிராமண மகாசபையின் தலைவரும் மாநில அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான அசோக் ஹரனஹள்ளி, கர்நாடக அரசாங்கத்தின் நடவடிக்கையை பிராமண எதிர்ப்பு என்று கூறியுள்ளார்.

சமூகத்தில் முன்னேறிய சமூகங்களில் உள்ள ஏழைகளுக்கான 10 சதவீத EWS இடஒதுக்கீடு, 2019-ம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இது சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு டிசம்பர் 29-ம் தேதி வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளை மிதமாக பின்தங்கியவர்கள் என்று மறுவகைப்படுத்த முடிவு செய்தது. இரண்டு புதிய ஓ.பி.சி பிரிவுகளை உருவாக்க முன்மொழிந்தது. தற்போதுள்ள தற்போதுள்ள 4 மற்றும் 5 சதவீத ஒதுக்கீட்டை முறையே பயன்படுத்தி, 6 சதவீத EWS ஒதுக்கீட்டை கலந்து சேர்க்கிறது.

இரண்டு ஆதிக்க சமூகங்களுக்கு இடையே 6 சதவீத EWS இடஒதுக்கீட்டை மறுபகிர்வு செய்ய பா.ஜ.க அரசாங்கம் முடிவு

லிங்காயத்துகளில் துணைப் பிரிவான பஞ்சமசாலி லிங்காயத்துகள், ஓ.பி.சி குழுக்களுக்கு கிடைக்கும் 15 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கும் வொக்கலிர்கள் 12 சதவீதம் ஓ.பி.சி இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் மக்கள்தொகையில் 17 சதவீதம் இருக்கும் லிங்காயத்துகள் மற்றும் 15 சதவீதம்இருக்கும் வொக்கலிகர்கள் சமூகத்தினரை கவர்ந்திழுக்கும் பா.ஜ.கவின் முயற்சியாக பசவராஜ் பொம்மை அமைச்சரவையின் முடிவு பரவலாகக் கருதப்படுகிறது.

பா.ஜ.க அரசாங்கம் 10 சதவீத EWS இடஒதுக்கீடு என்பது மாநிலத்தில் உள்ள உயர் சாதி சமூகங்களின் மக்கள்தொகையின் சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது என்று முடிவு செய்தது. அவர்கள் சுமார் நான்கு சதவீதம் மக்கள்தொகை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசாங்கத்தின் முடிவை நிராகரித்து போராடிவரும் பஞ்சமசாலி லிங்காயத்துகள், மாநில சட்டமன்றத் தேர்தலில் விளைவுகள் இருக்கும் என பா.ஜ.க-வை எச்சரித்துள்ள நிலையில், மாநில மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதத்தைக் கொண்ட பிராமண சமூகமும் கோபமடைந்துள்ளனர்.

EWS இடஒதுக்கீட்டை பிற சமூகங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு பிராமண சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அகில கர்நாடக பிராமண மகாசபா அறிவித்துள்ளது. “EWS-க்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளில்கூட மாநில அரசு பல ஆண்டுகளாக மனம் வைக்கவில்லை. இப்போது 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை பிரித்து குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு வழங்கவும், பிராமணர்களை 2 அல்லது 3 சதவீதமாக மட்டுமே கட்டுப்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்” என்று அசோக் ஹரனஹள்ளி கூறினார்.

2019 அரசியலமைப்புத் திருத்தத்தின்படி சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளின் கீழ் ஒதுக்கீட்டை அனுபவிக்கும் சமூகங்களுக்கு EWS பிரிவு இடஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று ஹரனஹள்ளி வாதிட்டார். “ஏற்கனவே பலன்களை அனுபவிக்கும் சமூகங்களுக்கு EWS-இன் கீழ் இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் விரும்புகிறது. இது பிராமணர்களிடையே அரசாங்கத்தின் மீதும் அதன் பிராமண விரோதக் கொள்கையின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. EWS பிரிவு இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததற்காக மாநில அரசு மீது பிராமண சமூகம் ஏற்கனவே வருத்தத்தில் உள்ளது” என்று கூறினார்.

அகில கர்நாடக பிராமண மகாசபை தலைவர், கர்நாடகாவில் உள்ள பிராமண சமூகம் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகர்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பது கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் மக்கள் தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கும் என்று டிசம்பர் 29 அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மாநில சட்ட அமைச்சர் ஜே.சி மதுசாமி தெரிவித்தார். “இந்த மதிப்பீடு மூன்று மாதங்களில் முடிவடையும்” என்று அவர் கூறினார், 2C (வொக்கலிகர்கள்) மற்றும் 2D (லிங்காயத்துக்கள்) பிரிவினருக்கான அதிகரிக்கும் இட ஒதுக்கீடு சதவீதம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இருப்பினும், ஆணையத்தின் இறுதி அறிக்கை எதிர்வரும் தேர்தல் வரை சமர்ப்பிக்கப்படாது.

உயர் சாதியினர் அடர்த்தியாக வாழும் சில பகுதிகளில் EWS இடஒதுக்கீடு அரசியல் தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்றாலும், மாநிலத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பின்தங்கிய சமூகங்கள் என்பதால், இந்தப் பிராந்தியங்களிலும் அது பெரும் விவாதமாக ஆகலாம். கர்நாடகாவில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.

அகில கர்நாடக பிராமண மகாசபா எழுப்பிய ஆட்சேபனையைத் தொடர்ந்து, இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சட்ட வல்லுனர்களுடன் விவாதிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார்.

கர்நாடகாவின் தற்போதைய இட ஒதுக்கீடு

பிரிவு I 4% பிற்படுத்தப்பட்ட சாதிகள்

பிரிவு-II (A) 15% இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்

பிரிவு-II (B) 4% முஸ்லிம்கள்

வகை-III (A) 4% வொக்கலிகர்கள் போன்ற சாதிகள்

வகை-III (B) 5 % லிங்காயத்துக்கள் போன்ற சாதிகள்

பட்டியல் சாதிகள் 17 %

பழங்குடியினர் 7 %

மொத்த இடஒதுக்கீடு சதவீதம் – 56 %

கூடுதலாக 10 % EWS ஒதுக்கீடு – 66 %

இடஒதுக்கீடு மீதான SC உச்சவரம்பு - 50 %

முன்மொழியப்பட்ட கர்நாடக அரசின் இடஒதுக்கீடு

பிரிவு I 4% பிற்படுத்தப்பட்ட சாதிகள்

பிரிவு-II (A) 15% இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்

பிரிவு-II (B) 4% முஸ்லிம்கள்

வகை-II (C) 4% வோக்கலிகர்கள் + மறுபகிர்வு செய்யப்பட்ட 6% EWS ஒதுக்கீடு

வகை-II (D) 5 % லிங்காயத்துக்கள் + மறுபகிர்வு செய்யப்பட்ட 6 % EWS ஒதுக்கீடு

பட்டியல் சாதிகள் 17 %

பழங்குடியினர் 7 %

EWS – 4 %

மொத்த முன்மொழிவு இடஒதுக்கீடு சதவீதம் – 66 %

இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த உச்சவரம்பு - 50 %

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment