கோவாக்ஸின் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்த பிரேசில்; காரணம் என்ன?
ஒப்பந்தத்தில் முறைகேடு உள்ளது என்று பலரும் குற்றம் சுமத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் போல்ஸோனாரோவிற்கு தற்போது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
Brazil suspends Covaxin deal as graft allegations probed : பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்த பிரேசில் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை அறிவித்தது.
Advertisment
@CGUonline-இன் பரிந்துரையின் மூலம், கோவாக்சின் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். சி.ஜி.யுவின் பூர்வாங்க பகுப்பாய்வின்படி, ஒப்பந்தத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை, ஆனால், இணக்கம் காரணமாக, மேலும் பகுப்பாய்வு நடத்த வேண்டும் என்பதற்காக @minsaude இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்தார் என்று பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ குய்ரோகா ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்து தென் அமெரிக்க நாடுகளின் அட்டர்னி ஜெனரல் ஒரு விசாரணையைத் தொடங்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து பிரேசிலுக்கான கோவாக்ஸின் ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"கோவாக்ஸின் தடுப்பூசிக்கு @govbr எந்த சென்ட்டையும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் # கோவிட் 19 க்கு எதிரான தடுப்பூசி பிரச்சாரத்தின் வேகத்தை இந்த நடவடிக்கை சமரசம் செய்யாது, ஏனெனில் அவசரகால அல்லது நோயெதிர்ப்பு முகவரின் உறுதியான பயன்பாட்டிற்கு அன்விசாவிடம் எந்த ஒப்புதலும் இல்லை, ”என்று குய்ரோகா மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் முறைகேடு உள்ளது என்று பலரும் குற்றம் சுமத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் போல்ஸோனாரோவிற்கு தற்போது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தனது கவலைகள் குறித்து அதிபரை எச்சரித்ததாகக் கூறினார்.
பிரேசிலின் COVID-19 இறப்பு எண்ணிக்கை 500,000 ஐ தாண்டியதால் மதிப்பை இழந்த போல்ஸோனாரோ எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் இது தொடர்பான முறைகேடுகள் குறித்து எனக்கு ஏதும் தெரியவில்லை என்றூம் கூறினார். ஆனால் பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை என்பதால் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு இது ஒரு பிரச்சனையை உருவாக்கக் கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil