கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இந்திரா கேன்டீனை முதலமைச்சர் சித்த ராமையா திங்கள்கிழமை (மார்ச் 11,2024) திறந்து வைத்து, மாநில தலைநகர் உட்பட கர்நாடகா முழுவதும் 600 இந்திரா கேன்டீன்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
கேண்டீனை நடத்தும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே, சுமார் 2,000 வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கிறது. பெரும்பாலும் விமான நிலைய வண்டி ஓட்டுநர்கள் மற்றும் பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஓட்டுநர்கள் இதில் அடங்குவார்கள். இந்த நிலையில், 1.35 கோடி செலவில் சத்துணவு கூடம், சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து, பிபிஎம்பி அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகளும் கேண்டீனில் உணவு சாப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “நீங்கள் விமான நிலையத்திற்குள் உணவுக்கான விலையைப் பாருங்கள். 200 ரூபாய்க்குக் குறைவான காலை உணவு உங்களுக்குக் கிடைக்காது. அவர்களில் சிலர் உணவுக்காக இந்திரா கேண்டீனைச் சார்ந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
கேன்டீனை திறந்து வைத்து சித்தராமையா பேசுகையில், “பெங்களூருவில் 188 புதிய இந்திரா கேன்டீன்களை தொடங்க உள்ளோம். டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பிற ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இரண்டு கேன்டீன்கள் தொடங்கப்படுகின்றன.
இதில் 40 பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மீதமுள்ளவை நடந்து வருகின்றன. கெம்பேகவுடா விமான நிலையத்தில் இந்திரா கேண்டீன் தேவைப்பட்டது. இங்கு ஏற்கனவே ஒன்று திறக்கப்பட்டு மற்றொரு இந்திரா கேன்டீன் வரவுள்ளது.
ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு மற்றும் காலை உணவை வழங்குவதே இதன் நோக்கம். காலை உணவு 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது, மதிய உணவு மற்றும் இரவு உணவு 10 ரூபாய்க்கு வழங்கப்படும். உணவு மெனுவும் மாற்றப்பட்டுள்ளது.
உணவு கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவின் அனைத்து வார்டுகளிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்திரா கேன்டீன்கள் அமைக்கப்படும்” என்றார்.
மேலும், “கடந்த அரசாங்கம் உணவு வழங்கவில்லை, சில மூடப்பட்டன” என விமர்சித்தார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Breakfast for Rs 5 and lunch for Rs 10: Siddaramaiah launches Indira Canteen at Bengaluru airport
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“