BRICS : ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து தாலிபான்கள் என்று குறிப்பிடாமலும், பொறுப்பு கூறாமலும் பிரிக்ஸ் மாநாட்டில், வியாழக்கிழமை அன்று அந்நாட்டின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கவலை தெரிவித்தனர் உலக தலைவர்கள். வன்முறையிலிருந்து விலகி அமைதியான வழிகளில் நிலைமையை சரிசெய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் வந்த பிறகு முதன்முறையாக இந்தியா புதுடெல்லி பிரகடனத்தை அறிவித்தது. இது ப்ரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து ஆன்லைன் மூலம், மோடி விருந்தினராக பங்கேற்க நடைபெற்றது. ஆப்கான் நாட்டினருடனான ஒரு உரையாடலை அப்போது உலக தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாத இயக்கங்கள் தீவிரவாத சரணாலயங்களாக பயன்படுத்துவது, மற்ற நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்துவது, மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளே போதைப் பொருள் வர்த்தகம் செய்வது போன்ற பயங்கரவாதத்திற்கு எதிராக எங்களின் முன்னுரிமைகளை அடிக்கோடிட்டு காட்டுகின்றோம் என்று அந்த பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தது.
டெல்லியை பொறுத்தமட்டில் இந்தியாவிற்கு எதிரான சதித்திட்டங்களில் இறங்கும் ஹக்கானி குழு, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற குழுவினருக்கு இது ஒரு எச்சரிக்கையாகும். பெய்ஜிங்கை பொறுத்தமட்டில், சின்ஜியாங் பகுதியில் செயல்பட்டு வரும் கிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்திற்கான ஒரு எச்சரிக்கை செய்தியாகும்.
நாட்டின் மக்கள் தொகையை பிரதிநிதித்துவப்படுத்தாதது போல் டோன்றும், உள்ளடக்கம் இல்லாத தாலிபான் அரசு அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வெளியிடப்பட்ட இந்த பிரகடனத்தில், நாட்டில் ஸ்திரத்தன்மை, சிவில் சமாதானம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு உரையாடலை வளர்ப்பதற்கு பங்களிப்பதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிக் ஸ்டேட் (கோரசன்) பொறுப்பேற்றுக் கொண்ட காபூல் சர்வதேச விமான நிலையம் மீதான தீவிரவாத தாக்குதல்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமீத் கர்சாய் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இதன் விளைவாக ஏராளமான இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித நேய சூழல் குறித்து குறிப்பிட்ட பிரகடனம், “மனிதாபிமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், பெண்கள், குழந்தைகள், மற்றும் சிறுபான்மயினர் உள்ளிட்டோரின் உரிமைகளை காக்கவும் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் குறித்து இந்த ஆண்டு ப்ரிக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கைகளை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது.
அந்த நேரத்தில் ரஷ்யா தலைவராக இருந்த காரணத்தால் அது மாஸ்கோ பிரகடனம் என்று கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசில் நீண்டகால அமைதியை உருவாக்க அழைப்பு விடுத்திருந்தது. மேலும் ஒரு நிலையான தொழிற்துறையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அசைக்க முடியாத முழு ஆதரவையும் வழங்குவோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
"சுதந்திரமான மற்றும் வளமான இறையாண்மை அரசு" போன்ற வார்த்தைகள் இந்த முறை அறிவிப்பில் காணவில்லை.ஆப்கானிஸ்தான் தலைமையிலான மற்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான சமாதான செயல்முறைக்கு ஆதரவு அளித்து கடந்த ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் ஆப்கான் தலைமையிலான மற்றும் ஆப்கானுக்கு சொந்தமான போன்ற பிரயோகங்கள் அந்த அறிக்கைகளில் இல்லை.
இந்த ஆண்டு அறிக்கையானது ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு பிறகு வருகிறது. பாதுகாப்ப் கவுன்சிலில் தாலிபான்கள் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ரஷ்யாவும் சீனாவும் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
பயங்கரவாதம் குறித்த பிரிக்ஸ் பிரகடனத்தில் அனைத்து நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்ததால் ஒருமித்த கருத்து என்று இந்திய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நாங்கள் அடையாளம் காண்கிறோம் என்றும் அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பயங்கரவாதம் எந்த மதம், தேசியம், நாகரிகம் அல்லது இனக்குழுவுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இருக்கும் இரட்டை நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான ஒப்பந்தத்தை விரைவாக ஏற்றுக்கொள்ளவும் விரிவுபடுத்தவும் அது அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் நாட்டை விட்டு வெளியேறியது புதிய நெருக்கடிக்கு வழி வகுத்தது என்றூ கூறினார். பிரிக்ஸ் நாடுகள் அங்குள்ள சூழ்நிலைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமான ஆப்கானிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து குறிப்பிட்ட ஒரே தலைவர் புடின் மட்டுமே. "ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் திரும்பப் பெறுவது ஒரு புதிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியது, இவை அனைத்தும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று அவர் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இயற்கையாகவே, ரஷ்யா மற்றும் அதன் பிரிக்ஸ் பங்காளிகள், ஆப்கானிஸ்தான் மண்ணில் நீண்டகாலமாக விரும்பிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அந்நாட்டின் மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் நாட்டினை வரையறுக்கும் உரிமைகள் அவர்களுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆனாலும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் போன்று அந்நாடு மற்ற அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை ப்ரிக்ஸ் நாடுகள் விரும்பவில்லை. இடம்பெயர்வை நிறுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் தகுதியான வாழ்க்கையை அவர்களின் தாயகத்தில் நாங்கள் பரிந்துரைக்கிறோம் ”என்று அவர் கூறினார்.
மோடி தன்னுடைய அறிக்கையில், நாம் பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனாலும், நாம் சுய திருப்தி அடையவில்லை என்பதும் முக்கியம். அடுத்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் இன்னும் கூடுதலான முடிவை நோக்கியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘பிரிக்ஸ்@15: தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்தலுக்கான உள் பிரிக்ஸ் ஒத்துழைப்பு என்று தேர்வு செய்யப்பட்ட கருப்பொருளுக்கு, தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா வழங்கும் முன்னுரிமையை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்த நான்கு ”சி”களும் ( Intra BRICS Cooperation for Continuity, Consolidation and Consensus) பிரிக்ஸ் கூட்டாண்மையின் அடிப்படைக் கொள்கைகளை குறிப்பிடுகிறது என்று அவர் கூறினார்.
பொது சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துங்கள்; அனைவருக்கும் சமமான அணுகல் உணர்வில் தடுப்பூசிகள் மீதான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்; பரஸ்பர நன்மை உணர்வில் பொருளாதார ஒத்துழைப்பு; நேர்மை மற்றும் நீதியின் உணர்வில் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற ஐந்து திட்டங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் வைத்தார்.
சீனா இந்த ஆண்டுக்குள் 100 மில்லியன் டாலர் கோவிட் -19 தடுப்பூசிகளை வளரும் நாடுகளுக்கான கொவாக்ஸுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கும் என்று சின்ஹுவா கூறினார்.
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தனது இந்திய வருகையை அன்போடு நினைவு கூர்ந்தாலும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அவர்கள் இணைந்து பணியாற்றும்போது என்ன சாதிக்க முடியும் என்பதை கோவிட் -19 க்கு அவர்களின் கூட்டு பதில் நிரூபித்துள்ளது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.