Advertisment

வெளிநாடுகளில் இறந்த உறவினர்களை சொந்த மண்ணிற்கு எடுத்து வர கை கொடுக்கும் ஏர் இந்தியா

இறந்தவர்களின் உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும். 50,000ல் இருந்து ஒரு லட்சம் வரையிலும் கூட கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இறந்த உறவினர்களை சொந்த மண்ணிற்கு எடுத்து வர

இறந்த உறவினர்களை சொந்த மண்ணிற்கு எடுத்து வர

Shubhajit Roy

Advertisment

இந்தியர்கள் பலர், வீட்டின் சூழல் காரணமாகவும், நிதித் தேவைக்காகவும், பொருளாதார மாற்றத்திற்காகவும் வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக அளவு இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அங்கு இறந்த உறவினர்களை சொந்த மண்ணிற்கு எடுத்து வர ஆகும் கால தாமதமும், செலவும் அனைவரும் அறிந்ததே.

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் தோராயமாக 80 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பயணம் செய்து வருகிறார்கள். மாரடைப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் அவர்கள் மரணமடைந்தாலோ, அல்லது விபத்துகளில் சிக்கி உயிரிழந்தாலோ அவர்களை, இறந்தவர்களை சொந்த மண்ணிற்கு கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகிவிடுகிறது.

காலதாமதம், காலவிரையம், மற்றும் பணம் இம்மூன்று காரணங்களும் நடுத்தர வர்க்கத்தினரால் ஏற்றுக் கொள்ள இயலாததாகவே உள்ளது. இது தொடர்பாக பலமுறை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், சிவில் ஏவியேசன் அமைச்சகத்திடமும் பேசி தற்போது தான் அதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இறந்த உறவினர்களை சொந்த மண்ணிற்கு எடுத்து வர - கட்டணம் எவ்வளவு ?

ஏர் இந்தியா விமானம் மூலமாக இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர ஃப்ளாட் ரேட் வசூலிக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.  6 வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் யாரேனும் இறந்துவிட்டால், இந்த கட்டண அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டு, இறந்தவர்களின் உடல் உறவினர்களுக்கு அளிக்கப்படும்.

இறந்த உறவினர்களை சொந்த மண்ணிற்கு எடுத்து வர

அமீரகத்தில் 33 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். சவுதி அரேபியா27 லட்சம் பேரும், குவைத்தில் 9 லட்சம் பேரும், ஓமனில் 8 லட்சம் பேரும், கத்தாரில் 6.5 லட்சம் பேரும் பஹ்ரைனில் 3.5 லட்சம் பேரும் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு நேரடி விமான சேவைகளை கொண்டிருக்கும் இந்த நாடுகளில் இருந்து, சாதரணமாக பயணிக்கும் ஒருவரின் பயணச் செலவில் 40% குறைக்கப்பட்டு இறந்தவர்களுக்காக வசூலிக்கப்படுகிறது. மேலும் 12 வயதிற்கு குறைவான குழந்தைகள் என்றால் இந்த தொகையில் பாதியே வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் வாரணாசியில் நடைபெற்ற ப்ரவாசி பாரதிய திவாஸ் அன்று இந்த பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. 2016 முதல் 2018ம் ஆண்டு வரை 486 நபர்களின் உடல்களை அவர்களின் சொந்தகளுக்கு அரசு செலவில் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக 1.6 கோடி ரூபாய் செலவு செய்யபட்டது என்று அங்கு குறிப்பிடப்பட்டது.

பொதுவாக விமானங்களில், இறந்தவர்களின் உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணங்கள் 50,000ல் இருந்து ஒரு லட்சம் வரையிலும் கூட நிர்ணயிக்கப்படும்.

மேலும் சவப்பெட்டியை, இதர பயணிகள் லக்கேஜ்ஜூடன் வைத்து கொண்டு வர இயலாது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Air India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment