கடந்த 2005 ஆம் ஆண்டு கேரளாவில் பா.ஜ.க தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் செய்தித் தொடர்பாளர் செயலாளரின் சகோதரர் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என கண்ணூரில் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில், இருவர் விசாரணையின் மரணமடைந்த நிலையில், ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தண்டனையை அறிவிக்கும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Brother of Pinarayi Vijayan’s press secretary among 9 found guilty in 2005 murder of Kerala BJP worker
இந்த வழக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர் மார்க்சிஸ்ட் தலைவர் டிபி சந்திரசேகரன் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் டிகே ராஜீஷ் மற்றும் முதல்வர் பினராயி விஜயனின் செய்தித் தொடர்பாளர் பிஎம் மனோஜின் சகோதரர் பிஎம்.மனோராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சிபிஐ(எம்) இன் முன்னாள் உள்ளூர் செயலாளரும், எடக்காடு பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான பிரபாகரன் மாஸ்டர் மற்றும் இரண்டு சிபிஐ(எம்) உள்ளூர் குழு உறுப்பினர்களான கேவி பத்மநாபன் மற்றும் மனோம்பேத் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், அரசு தரப்பின்படி, பாஜக தொழிலாளி எளம்பிலாய் சூரஜ் (32) கடந்த 2003 ஆம் ஆண்டு சிபிஐ (எம்) கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்த பிறகு, சிபிஐ(எம்) அவர் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடம் முன்பு, சூரஜ் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். இதல், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் பி. பிரேமராஜன் கூறினார்.
சிபிஐ(எம்) உள்ளூர் தலைவர்கள் பிரபாகரன், பத்மநாபன் மற்றும் ராதாகிருஷ்ணன் (கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள்) ஆகியோரும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். முதலில் நடந்த கொலை முயற்சிக்கு பிறகு, சூரஜ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், மேலும் அதில் இருந்து அவர் மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பியபோது மீண்டும் கொடிய தாக்குதலை எதிர்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யபபட்ட, குற்றப்பத்திரிகையின்படி, ஆகஸ்ட் 5, 2005 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் (மூன்று உள்ளூர் கட்சித் தலைவர்கள் உட்பட) சூரஜை ஒழிக்க ஒரு சதியில் ஈடுபட்டுள்ளனர். "ஆகஸ்ட் 7 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஓட்டி வந்த ஆட்டோரிக்ஷாவில் வந்து, சூரஜை கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கினர்," என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு ஓட முயன்றபோது, சாலையில் விழுந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட என்.வி. யோகேஷ் கழுத்தில் வாளால் வெட்டியுள்ளார். அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ராஜீஷ் தலையில் கோடரியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை 2010 இல் தொடங்கியிருந்தாலும், தொடர்ந்து வழக்கு நடைபெறவில்லை. சிபிஐ(எம்) ஆதரவாளர்களின் தலைவர் டி.கே. ராஜீஷ், சிபிஐ(எம்) கட்சியை விட்டு வெளியேறி ஒரு கிளர்ச்சி அமைப்பை உருவாக்கிய டி.பி. சந்திரசேகரன் கொலையில் கைது செய்யப்பட்ட பின்னர், கடந்த 2012 இல் இந்த வழக்கு ஒரு புதிய திருப்பத்தை கண்டது. வழக்கு விசாரணையில், சூரஜ் உட்பட பிற அரசியல் கொலைகளில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜீஷ் ஒப்புக்கொண்டார்.
சந்திரசேகரன் கொலை செய்யப்படும் வரை, கண்ணூரில் நடந்த அரசியல் கொலைகளில் ராஜீஷின் பங்கு ஒருபோதும் வெளியில் தெரியவல்லை. இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் சூரஜ் கொலை வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.