Advertisment

கூகுள் மேப் மூலம் கர்நாடக கோவில்களில் நகைகளை திருடிய சகோதரர்கள் கைது

கர்நாடகாவில் கோவில் நகைகளை திருடிய சகோதரர்கள் கைது; கூகுள் மேப்ஸ் மூலம் குறைந்த பாதுகாப்பு உள்ள கோவில்களை தேர்வு செய்தது விசாரணையில் அம்பலம்

author-image
WebDesk
New Update
karnataka police thieves

கோவிலில் திருடியவர்களை கைது செய்த கர்நாடகா போலீஸ்

Kiran Parashar

Advertisment

வடக்கு கர்நாடகாவில் குறைந்த பாதுகாப்புடன், அதிகம் அறியப்படாத கோயில்களைக் கண்டறிய கூகுள் மேப்ஸ் மூலம் தேடி, அந்தக் கோவில்களிலிருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடிய இரண்டு சகோதரர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக கடக் மாவட்ட போலீஸார் தெரிவித்தனர். மேலும், மேலதிக விசாரணையில் சசோதரர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் தங்களது மூத்த சகோதரனையும் கொலை செய்தது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் படிக்க: 2 brothers who stole ornaments from Karnataka temples with help of Google Maps arrested

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, எட்டு கோவில் திருட்டு வழக்குகள் மற்றும் 7 செயின் பறிப்பு வழக்குகள் தீர்க்கப்பட்டு, 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடக் மாவட்டத்தில் கோயில் திருட்டு வழக்கு விசாரணையில், ஹாவேரி மாவட்டம் ரானேபென்னூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குடகுரா, 29, அவரது சகோதரர் பிரசாத், 28, மற்றும் அவர்களது கூட்டாளி பிரதீப், 24, ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். முன்னாள் ஜெயிலரான ஸ்ரீகாந்த் இந்த கும்பலின் மூளையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இருவரும் தங்களது மூத்த சகோதரர் ரமேஷ் (31) என்பவரையும் 2023-ம் ஆண்டு மே மாதம் கொலை செய்து அவரது உடலை ரானேபென்னூர் தாலுகாவில் புதைத்துள்ளனர் என்று போலீசார் முடிவு செய்தனர்.

குற்றவாளிகள் எப்படி பிடிபட்டார்கள்

இந்த ஆண்டு ஜூன் மாதம் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஸ்வரா காவல் நிலைய எல்லைக்குள் கோயில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடக், விஜயபுரா மற்றும் ஹாவேரி மாவட்டங்களில் காவல்துறையினரை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய கோயில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திருட்டு நடந்தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈரண்ணா ரிட்டி மற்றும் அவரது குழுவினரால் பிரசாத் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டனர். ஆனால் பிரசாத் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கள உளவுத்துறையின் உதவியுடன் போலீசார், பிரசாத் தனது சகோதரர் ஸ்ரீகாந்துடன் ரானேபென்னூர் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்ததை அறிந்தனர். அதனைத்தொடர்ந்து சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

சகோதரர்கள் அம்பாபவானி கோவில், ஹேமகிரி மடம், துர்காதேவி மற்றும் மாருதி கோவில், ஹேமகிரி சன்னபசவேஸ்வர மடம், பனசங்கரி கோவில், கிராமதேவதே கோவில் மற்றும் பனசங்கரி தேவி கோவில் ஆகியவற்றில் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கும்பல் எப்படி செயல்பட்டது

விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவில்களில் திருடப்பட்ட நகைகளை அப்புறப்படுத்தி கொள்ளை சம்பவங்களை திட்டமிட்ட தலைவன் ஸ்ரீகாந்த். சித்ரதுர்கா சிறையில் உள்ள சிறை கண்காணிப்பாளரான ஸ்ரீகாந்த் மீது திருட்டு வழக்கில் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் 2022 இல் கலபுர்கி சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த காலகட்டத்தில், ஸ்ரீகாந்தின் சகோதரர்கள் ரமேஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தனர். ஸ்ரீகாந்த் அவர்கள் தன்னிடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர உதவினார் என்று போலீசார் தெரிவித்தனர்.

“ஸ்ரீகாந்த் கூகுள் மேப்பில் கோவில்களைத் தேடிப்பார்ப்பார். அவர் அதிகம் பிரபலம் இல்லாத கோயில்களை விரும்பினார், அதாவது குறைவான பாதுகாப்பு உள்ள கோவில்கள். பிரசாத்தையோ, ரமேஷையோ கோயில் பாதுகாப்பு குறித்து அறிய அனுப்புவார். கோவிலில் இருந்து குறைந்தது 50 கிமீ தொலைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதை உறுதிசெய்யும் வகையில், ஸ்ரீகாந்த் கொள்ளையைத் திட்டமிடுவார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தினார் என்று கேட்டதற்கு, ஸ்ரீகாந்த் சீரற்ற கோயில்களை குறிவைக்க விரும்பியதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். பகலில் சங்கிலிகளை திருடும் கும்பல், இரவில் கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. நன்கொடை பெட்டிகளில் இருந்த கடவுள் மற்றும் தெய்வங்களின் நகைகள் மற்றும் பணத்தை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று அதிகாரி மேலும் கூறினார். திருடப்பட்ட பணத்தில் பெரும்பாலானவை கோவாவில் உள்ள கேசினோக்களில் செலவிடப்பட்டன அல்லது சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்டன என்று அதிகாரி கூறினார்.

அண்ணன் கொலை எப்படி வெளிச்சத்துக்கு வந்தது

சகோதரர்கள் மூவரும் இணைந்து செயல்பட்டதும், ரமேஷை காணவில்லை என்பதும் போலீசாருக்கு தெரியும். “ரமேஷ் பற்றி நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் தெளிவற்ற பதில்களைக் கொடுக்கத் தொடங்கினர். நாங்கள் அவர்களை தனித்தனியாக விசாரித்தபோது, அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

ரமேஷுக்கு திருமணமாகிவிட்டதாகவும், திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது மனைவி அவரை விட்டுச் சென்றுவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மே 10, 2023 அன்று, சகோதரர்கள் ரானேபென்னூர் நகருக்கு வெளியே கட்டுமானத்தில் இருக்கும் லேஅவுட்டில் பார்ட்டி நடத்திக் கொண்டிருந்தனர், அப்போது கொள்ளையடித்ததை பங்கு பிரிப்பது தொடர்பாக ரமேஷ் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தருவதாக மிரட்டியதாகவும், இது ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத்தை கழுத்தை நெரித்து கொலை செய்ய தூண்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதே இரவில், இருவரும் குழி தோண்டி ரமேஷின் உடலை புதைத்தனர் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

ஆனால், ரமேஷ் திருட்டு வழக்கில் கைதாகி வேறு மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாக சகோதரர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால், சம்பவம் வெளிச்சத்துக்கு வரவில்லை.

ரமேஷ் கொலை குறித்து அவரது தாய் யல்லம்மா அளித்த புகாரின் பேரில் ரானேபன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karnataka theft
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment