Rajasthan changes govt school uniform : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான சீருடைகளின் நிறத்தை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட். லைட் ப்ரவுன் நிறத்தில் சட்டையும், சுடிதார் டாப்பும், ப்ரவுன் நிறத்தில் கால் சட்டையும், பாவடையும், ட்ரவுசர்களையும் 2017ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிச்சீருடையின் நிறங்களில் மாற்றம் கொண்டு வந்த வசுந்த்ரா ராஜேவின் முடிவிற்கு அன்றே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த ஆடைகள் பார்க்க ஆர்.எஸ்.எஸ். சீருடைகள் போலவே உள்ளன என்றும் குற்றம் சுமத்தியது.
புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் பள்ளிக் கல்வித்துறை, பள்ளி மாணவர்கள் சர்ஃப் ப்ளூ (நீலம்) மற்றும் சாம்பல் நிறங்களில் சீருடைகள் அணிவார்கள் என்று கூறியுள்ளது. மேலும் குளிர்காலங்களில் அடர் சாம்பல் நிற கோட்டுகளும் ஸ்வெட்டர்களும் பயன்படுத்தப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு
ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு சீருடைக்கும் ரூ. 600 வழங்கப்படும் என்றும் மூன்று மாதங்களில் அவர்கள் போதுமான அளவில் தயாராகிவிடுவார்கள் என்றும் கல்வித்துறை கூறியுள்ளது. புதிய சீருடைக்கான டெண்டரை அரசு விரைவில் வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 66 லட்சம் மாணவ, மாணவியர் இலவச சீருடை பெற தகுதி பெற்றுள்ளனர். மூத்த மாணவர்களுக்கும் அதே நிறத்தில் தான் சீருடைகள் வழங்கப்படும்.
கெலாட்டின் இந்த அறிவிப்பை விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏவும் முன்னாள் கல்வி அமைச்சருமான வாசுதேவ் தேவ்நானி “இது ஒரு சர்வாதிகார உத்தரவு. மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் எந்த விதமான கோரிக்கையையும் வைக்காத போது, மூன்று-நான்கு ஆண்டுகளுக்குள் சீருடையை மாற்றுவதில் எந்த தர்க்கமும் இல்லை. சீருடை வாங்குவதற்கான கூடுதல் பணச் சுமையை பெற்றோர்கள் சுமக்க வேண்டும், அவர்கள் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு சகாக்களுடன் இரவு உணவு, ஒயின்; முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
1997ம் ஆண்டு சீருடை நிறங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து பாஜக 2017ம் ஆண்டு சீருடை நிறங்களை மாற்றியது. 2017ம் ஆண்டுக்கு முன்பு பள்ளி சீருடைகள் எப்படி இருந்தனவோ அப்படியே புதிய சீருடைகள் இருக்கும் என்று ராஜஸ்தானின் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராம்கிருஷ்ணா அகர்வால் கூறினார்.
சமீபத்திய மறுசீரமைப்பில் கல்வித்துறையை பெற்ற அமைச்சர் பி.டி. கல்லா, இந்த அறிவிப்பிற்கு பின்னால் எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். “எனக்கு முன் இருந்த அமைச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நான் அதை வெறுமனே ஏற்றுக்கொண்டேன். சீருடையில் அரசியல் செய்தது, மாணவர்களுக்கு காவி நிற சைக்கிள் விநியோகம் செய்தது, கட்சி கொடியின் நிறத்தை திணித்தது பாஜக தான். நீலம் மற்றும் சாம்பல் நிற சீருடைகளுக்கு பின் எந்தவிதமான அரசியல் தொடர்பும் இல்லை என்று கல்லா கூறினார்.
வழக்குகளை திரும்பப் பெற அரசு உறுதி: ஓராண்டாக நீடித்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்
கல்லாவிற்கு முன்பு கல்வி அமைச்சராக இருந்த மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடாஸ்ரா இந்த விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். மூத்த காங்கிரஸ் தலைவர், இந்த முடிவு அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி மூலமாக ஓராண்டுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil