/indian-express-tamil/media/media_files/Sa3fo3EZNhZu70c1ZTgG.jpg)
தெலங்கானா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கோத்த பிரபாகர் ரெட்டி
தெலங்கானாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஆளுங்கட்சி எம்.பி. கோத்த பிரபாகர் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டார். அவர் தற்போது செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலங்னானாவில் ஆளும் பாரதீய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் மேதாக் மக்களவை எம்.பி. கோத்த பிரபாகர் ரெட்டி சித்திபெட் மாவட்டத்தில் உள்ள சூரம்பள்ளி கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ராஜூ என்பவரை அவரை கத்தியால் குத்தினார். பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் கத்திக் குத்து விழுந்தது.
இதை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் அங்கிருந்த பிஆர்எஸ் கட்சித் தொண்டர்கள் ராஜூவை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பிரபாகர் ரெட்டிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் அவர் செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தெலங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பிரபாகர் ரெட்டி கத்திக் குத்து தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், தேர்தல் காலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தெலுங்கானா மக்களும், அறிவுஜீவிகளும் அரசியலில் வன்முறையைக் கண்டிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க : BRS MP Kotha Prabhakar Reddy stabbed while campaigning in Siddipet
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.