BS Yediyurappa’s granddaughter : முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூராப்பாவின் பேத்தி சவுந்தர்யா தன்னுடைய பெங்களூரு அப்பார்ட்மென்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் பெங்களூருவில் உள்ள பவ்ரிங் அண்ட் லேடி கர்ஸோன் (Bowring and Lady Curzon Hospital) மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பி.எஸ். எடியூரப்பாவின் மகள் பத்மாவின் மகள் சவுந்தர்யா ஆவார். இந்த அதிர்ச்சி செய்து கேட்ட கர்நாடக முதல்வர் பொம்மை தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவராக பெங்களூருவில் அமைந்திருக்கும் எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் சவுந்தர்யா. 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சக மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சவுந்தர்யா தன்னுடைய கணவர் மற்றும் 6 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். காவல்துறையினர் இவரின் தற்கொலை பின்னால் இருக்கும் காரணங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை என்பது சரியான முடிவாகாது. மனநல பிரச்சனை அல்லது தற்கொலை எண்ணங்களால் தவித்து வருகிறீர்கள் என்றால் மாநில மற்றும் மத்திய அரசுகளின் உதவி மையங்களை நாடவும். மாநில மனநல ஆலோசனை உதவி மையத்தை 104 என்ற எண்ணிலும், ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையத்தை 044-24640050 என்ற எண்ணிலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil