கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜயேந்திரா எடியூரப்பா தனது தந்தை எடியூரப்பாவின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தோல்வி அடைந்த நிலையில், பா.ஜ.க தேசியத் தலைமை அம்மாநில பா.ஜ.க-வுக்கு புதிய தலைவராக, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திர எடியூரப்பாவை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள எடியூரப்பா மகன் விஜயேந்திரா எடியூரப்பாவுக்கு பா.ஜ.க தலைவகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“