எல்லை தாண்டி சென்ற ராணுவ வீரர்: 20 நாளுக்குப் பின் இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான்

சனிக்கிழமையன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமையன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
BSF jawan returns to India

BSF jawan, held by Pakistani rangers on April 23, returns to India

சர்வதேச எல்லையைத் தாண்டியதற்காக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் புதன்கிழமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

Advertisment

எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், “ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் காவலில் இருந்த பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷா இன்று காலை 10:30 மணியளவில் அம்ரித்சரில் உள்ள அட்டாரி கூட்டு சோதனைச் சாவடி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த ஒப்படைப்பு அமைதியான முறையில் மற்றும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படி நடைபெற்றதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதான பூர்ணம் ஷா, காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற ஒரு நாளுக்குப் பிறகு, ஏப்ரல் 23 அன்று பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தவறுதலாகக் கடந்தபோது பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பல நாட்களாக துப்பாக்கிச் சண்டை நீடித்த நிலையில், இந்தியா பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்களைகுறிவைத்து ஆபரேஷன் சிந்தூர்நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்குப் பிறகு, சனிக்கிழமையன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

Read in English: BSF jawan, held by Pakistani rangers on April 23, returns to India

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: