பிஎஸ்என்எல் ஊழியர்களில் பாதி; எம்டிஎன்எல்-லில் 80% மொத்தம் 93000 பேர் வி.ஆர்.எஸ்

நாட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டமாக ஊழியர்களின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் (பிஎஸ்என்எல்), மஹாநகர் தொலைபேசி நிகம் லிமிடேட் (எம்.டிஎன்.எல்) ஊழியர்கள் கிட்டத்தட்ட 93000 பேர் மத்திய அரசால் அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளனர்.

Tamil news today live updates
Tamil news today live updates

நாட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டமாக ஊழியர்களின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் (பிஎஸ்என்எல்), மஹாநகர் தொலைபேசி நிகம் லிமிடேட் (எம்.டிஎன்.எல்) ஊழியர்கள் கிட்டத்தட்ட 93000 பேர் மத்திய அரசால் அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளனர்.

அதிக நஷ்டத்தில் செயல்படும் நிறுவனங்களை மறுசீரமைப்பிற்கான மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊதிய மசோதாவில் செலவுகளை வெகுவாக குறைக்கும். மேலும், எதிர்காலத்தில் பணம் புரளுவதற்கு சாத்தியமுள்ள ரியல் எஸ்டேட்டை தாராளமாக்கும்.

2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 1,53,000 ஊழியர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் சரியாக மொத்தம் 78,569 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

18,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட எம்டிஎன்எல் நிறுவனத்தில், கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் – 14,400 ஊழியர்கள் விருப்ப ஓய்வை தேர்வு செய்துள்ளனர்.

வி.ஆர்.எஸ்.ஸைத் தேர்வுசெய்த பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் பெரும்பாலோர் நிர்வாகமற்ற பிரிவிலும், 55-60 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சுமார் 93,000 பேர் வி.ஆர்.எஸ். பெற்றுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதை எதிர்த்து ஒரு நீதிமன்ற வழக்கு கூட இல்லை. பிஎஸ்என்எல்லின் ஊதிய மசோதா சுமார் 50 சதவிகிதம் குறையும், அதே நேரத்தில் எம்டிஎன்எல் ஊதிய செலவுகள் 75 சதவிகிதம் குறையும். சுமார் 1,300 கோடி ரூபாயாக இருந்த ஊழியர்களுக்கான அவர்களின் வருடாந்திர செலவு ரூ.650 கோடியாகக் குறையும் ”என்று தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நிறைய ரியல் எஸ்டேட் இடத்தையும் விடுவித்துள்ளது, இது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டும் ஏற்கனவே பணமாக்கத் தொடங்கியுள்ளன. இரண்டு தொலை தொடர்பு நிறுவனங்களில் பெரிய நிறுவனமான பி.எஸ்.என்.எல் இந்த நிதியாண்டில் சுமார் 300 கோடி ரூபாய் வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது. அதன் நிலங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு திருவனந்தபுரம், போபால் போன்ற இடங்களில் விற்பனை செய்துள்ளது.

மறுபுறம், எம்டிஎன்எல் அதன் கட்டிட இடத்தை பல்வேறு இடங்களில் குத்தகைக்கு விட வருமான வரித் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிஓடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், புதுடெல்லியில் உள்ள தனது கட்டிடத்தை குத்தகைக்கு விடவும் தொடங்கியுள்ளது. மத்திய டெல்லியில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் உள்ள ஒரு தளம் ஜனவரியில் இருந்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், நவம்பர் 4 முதல் ஒரு மாதத்திற்கு வி.ஆர்.எஸ் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் வி.ஆர்.எஸ் தேர்வு செய்த ஊழியர்களுக்கான கடைசி தேதி ஜனவரி 31 ஆகும். இரண்டு அரசு நிறுவனங்களில் உள்ள 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்தவொரு ஊழியரும் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்ய தகுதியுடையவர்கள்.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த தொகை இழப்பீடு அல்லது எக்ஸ்-கிராஷியா கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் சேவையில் 35 நாட்கள் சம்பளமாகவும், ஓய்வு பெறும் வரை ஒவ்வொரு ஆண்டும் 25 நாட்கள் சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வி.ஆர்.எஸ் பணிகள் நிறுவனத்தை புதுப்பிக்க மூலதன உட்செலுத்துதலை பூர்த்தி செய்ய, 2020-21க்கான பட்ஜெட்டில் ரூ.37,268 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்த வி.ஆர்.எஸ் அறிவிப்பை மதிப்பீடு செய்ததில், வி.ஆர்.எஸ் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் ஒரு ஊழியர் விருப்ப ஓய்வு பெறும் தேதிக்கு (ஜனவரி 31) முன் இறந்துவிட்டால், எக்ஸ் கிராஷியா செலுத்தும் தொகை இறந்த ஊழியரின் குடும்பத்தினருக்கோ அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கோ அளிக்கப்படமாட்டாது.” என்று கூறியுள்ளது.

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய இரு நிறுவனங்களும் வி.ஆர்.எஸ் செயல்படுத்துவதில் தங்கள் ஊழியர்களிடமிருந்து சில எதிர்ப்பை எதிர்கொண்டனர். இரு நிறுவனங்களின் பண நெருக்கடி காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இது பிராந்திய மையங்களில் உடனடி வேலை நிறுத்தங்களுக்கு வழிவகுத்தது என்று ஒரு (டிஓடி)அதிகாரி கூறினார். இறுதி ஆவண அனுமதி கிடைத்தவுடன் இது தீர்க்கப்படும் என்று கூறினார். மேலும், விஆர்எஸ்-ஸைத் தேர்ந்தெடுப்பதும் முடிந்தது.

இந்த நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அக்டோபரில் வி.ஆர்.எஸ் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 4 ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பி.எஸ்.என்.எல்-எம்.டி.என்.எல்.லின் நிலம், கட்டிடம் மற்றும் கோபுர சொத்துக்களை பணமாக்குதல், கடன் மறுசீரமைப்பு ஆகிய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bsnl mtnl employees vrs

Next Story
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வழக்கில் தீர்ப்பளிக்கும்போது மயங்கி விழுந்த உச்ச நீதிமன்ற நீதிபதிjustice r bhanumathi, r bhanumathi, உச்ச நீதிமன்றம், நீதிபதி ஆர்.பானுமதி, supreme court justice r bhanumathi, நீதிபதி பானுமதி மயங்கி விழுந்தார், r bhanumathi faints, டிசம்பர் 2012 கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு, justice r bhanumathi faints, december 2012 gangrape case, december 2012 gangrape, india news, Tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com