இந்திய நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தகவல்!

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2017 -18 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2017 -18 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

2018- 19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாரளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட்டது. அருண் ஜெட்டில் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 2018 – 19 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பு, நாட்டில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாரளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது அருண் ஜெட்லி பேசியதாவது “ 017 – 18 ம் ஆண்டில் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 5-வது இடத்திற்கு முன்னேறும். விரைவில், இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். உலகின் 7 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், கல்வி துறையை பொருத்த வரையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நாட்டின் உற்பத்தி துறை இதுவரை இல்லாத அளவிற்கு அளவிற்கு தற்போது வேகமாக உயர்ந்துள்ளது. 2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை பாஜகஅரசு மிகச்சிறப்பான முறையில் அதிகரிக்கச் செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

×Close
×Close