மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில், அருண் ஜெட்லி சில இலவச சலுகைகளை அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமான இலவச அறிவிப்புகள்.
*8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம்.
*4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டம்.
*இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை திட்டம்.
*10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் மருத்துவத்திட்டம்.
*எஸ். சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டிற்காக நிதியில் 50 சதவீத உயர்வு
*500 நகரங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் அம்ருத் திட்டம்
*சிறு, குறு தொழில்களின் வரிக் குறைப்பு
*சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி.
*பழங்குடியினரை மேம்படுத்தும் 305 திட்டங்கள்
*பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி வீடுகள்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தக்யுள்ளதாக அருண் ஜெட்லி தெவித்துள்ளார். மேலும், 2018 -19 நிதியாண்டிற்கான பட்ஜெட் சாமனியர்களுக்கு பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.