Budget 2019, When and Where to Watch Live Streaming: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நாளை(பிப்.1) தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால், அவர் கவனித்து வந்த நிதியமைச்சக பொறுப்பு கடந்த வாரம் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Union Budget 2019 Live Streaming Online: பட்ஜெட் கூட்டத் தொடர் லைவ்
பட்ஜெட் 2019 தாக்கல்: எங்கு, எப்படி பார்ப்பது?
பட்ஜெட் 2019 தாக்கல் நிகழ்வை, தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் லைவாக காணலாம்.
காலை 11 மணிக்கு நிதியமைச்சர் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி வாயிலாக தூர்தர்ஷன், லோக் சபா டிவி மற்றும் ராஜ்ய சபா டிவிக்கள் மூலம் நேரடியாக பட்ஜெட் தாக்கலை காணலாம்.
தூர்தர்ஷன், லோக் சபா டிவி மற்றும் ராஜ்ய சபா டிவி லைவ் ஒளிபரப்பை யூடியூபிலும் நீங்கள் காணலாம்.