பட்ஜெட் உரையில் திருக்குறள், ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். ‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து’ என்றார். விளக்கம்…

By: Updated: February 1, 2020, 02:02:06 PM

2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்து பேசி வருகிறார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து’

என்றார்.

விளக்கம் :

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு.

நல்ல நாட்டுக்கு உதாரணமாக வள்ளுவர் கூறிய 5 கூற்றுகளும் இந்தியாவுக்கு தற்போது பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல், அவர் தனது உரையில் ஒளவையாரின் ‘ஆத்திச்சூடியை’ குறிப்பிட்டு பேசினார். ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடிய குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர், 3000 வருடங்களுக்கு முன்பே விவசாயத்தை பற்றி குறிப்பிட்டிருப்பதாக பெருமை தெரிவித்தார். விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்ற விளக்கத்தையும் அவர் அளித்தார்.

சமஸ்கிருத ராமாயணம்

இரண்டாம் பகுதியில் காளிதாஸ் எழுதிய சமஸ்கிருத ராமாயணத்தை மேற்கோள் காட்டிப் பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Budget 2020 nirmala sitharaman highlighted thirukkurai and aathichoodi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X