தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சாலைகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் அனுமதி

சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் மாநிலங்களான மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் போன்றவற்றின் சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கபட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

By: Updated: February 1, 2021, 06:58:52 PM

2021-2022 -ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்யை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். சுமார் 1.50 மணி நேரம் அவர் ஆற்றிய உரையில் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டதோடு பல திட்டங்களையும் அறிவித்திருந்தார். அதில் சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் மாநிலங்களான மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் போன்றவற்றின் சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ 1.03 லட்சம் கோடி செலவில் சுமார் 3,500 கிலோ மீட்டர்களுக்கு சாலைகள் அமைக்கப்பட உள்ளது. அதில் மதுரையிலிருந்து கொல்லம் வரையும், சித்தூர் முதல் தாட்சூர் வரையும் அமைக்கப்பட உள்ள சாலைகளும் அடங்கும்.

கேரளா மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.65,000 கோடி நிதியில் 1100 கிலோ மீட்ட்டருக்கு சாலைகள் அமைய உள்ளது. அதில் 600 கிலோ மீட்டரில் அமையவுள்ள மும்பை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையும் அடங்கும். அதோடு கொச்சியில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 11.5 கிலோ மீட்டரில் அமையவுள்ள இந்த ரயில் பாதைக்கு ரூ.1,957.05 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு சாலைகளை மேம்படுத்துவதரற்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்து. அதில் கல்கத்தா முதல் சிலிகுரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது.

அசாம் மாநிலத்திற்கு சாலைகளை மேம்படுத்துவதற்காக ஏற்கனவே ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,400 கோடி மேலும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு கிழக்கு மாநிலங்களில் சுமார் 1300 கி.மீ க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை இன்னும் மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மார்ச் 2022 க்குள் 8,500 கி.மீ தொலைவில் சாலைகளும், 11,000 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப் போக்குவரத்திற்காக நகர்ப்புறங்களில் சாலைகளும், பொருளாதார தாழ்வாரங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

“சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு 1,18,101 கோடி ரூபாய் சாலைகள் அமைக்கப்படும் செலவினத்திற்காக வழங்ப்பட்டுள்ளது. அதில் ரூ .1,08,230 கோடி மூலதனத்திற்கானது. இதுவே இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,500 கி.மீ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் உட்பட 60,000 கி.மீ நெடுஞ்சாலைகளை உருவாக்க என்.எச்.ஏ.ஐ
இலக்கு வைத்துள்ளது” என்று சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் கூறியிருந்தார்.

அதில் 9,000 கி.மீ தொலைவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார தாழ்வாரங்களும், 2,000 கி.மீ தொலைவில் அமையவுள்ள மூலோபாய எல்லை சாலைகள் மற்றும் கடலோர சாலைகளும் ஆகும். அதோடு 100 சுற்றுலா தலங்களும் 45 நகர நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கப்பட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Budget 2021 infra push for poll bound states fm announces special road highway and metro projects for assam bengal tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X