மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உர மானியத்தில் சுமார் 35,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலத்தை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே ஒரு ஹெக்டேருக்கு உரங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் பஞ்சாப் மாநிலம், உர மானியத்தில் கிட்டத்தட்ட ரூ.3,141 கோடியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், இந்தச் சுமை விவசாயிகள் மீது மாற்றப்பட வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உரங்களுக்கான மானியத் தொகை ரூ.1,40,122 கோடியில் இருந்து ரூ.1,05,222 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது சுமார் ரூ. 34,900 கோடிகள் அதாவது 25 சதவீதம் குறைவு.
பாஞ்சாப் நாட்டில் 1.53 சதவீதம் பரப்பளவைக் கொண்ட மாநிலம். பஞ்சாப் இந்தியாவில் பயன்படுத்தப்படும் டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), யூரியா, மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (எம்.ஓ.பி) மற்றும் சூப்பர் உள்ளிட்ட மொத்த உரங்களில் சுமார் 9 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. பஞ்சாப் ஒரு ஹெக்டேருக்கு அதிக உரத்தைப் பயன்படுத்தும் மாநிலங்களில் ஒன்று. இதனால், பஞ்சாப் மாநிலத்தின் இழப்பு சுமார் ரூ.3,141 கோடியாக இருக்கும். இது மானியத் தொகையில் மொத்தக் குறைப்பு ரூ.34,900 கோடியில் 9 சதவீதமாகும்.
உரங்களின் விலை உயரும் பட்சத்தில் இந்த அளவு மேலும்கூட உயரலாம் என்றும், சர்வதேச சந்தையில் உரங்களின் விலை உயர்வு காரணமாக உயரலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பஞ்சாப்பில் ஒரு மெட்ரிக் டன் யூரியாவுக்கு மொத்தம் ரூ.16,800 மானியம் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயிகள் யூரியா ஒரு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.5,911 செலுத்தி வந்தனர். 45 கிலோ யூரியா மூட்டைக்கு 760 ரூபாய், அதாவது 45 கிலோ மூட்டைக்கு ரூ.266.50 மானியத் தொகை. அதேபோல, ரூ.1,650 டி.ஏ.பி ஒரு மூட்டைக்கு மானியம் கிடைத்த நிலையில், விவசாயிகள் 50 கிலோ டி.ஏ.பி மூட்டைக்கு ரூ.1,200 செலுத்தி வந்தனர்.
தேர்தல் காரணமாக சில மாதங்களுக்கு முன் டிஏபிக்கான மானியத்தை அரசு உயர்த்தியது. மானியத்தை உயர்த்தவில்லை யென்றால், 50 கிலோ மூட்டை விவசாயிகளுக்கு ரூ.1,900 செலவாகும் என்று உர வியாபாரிகள் தெரிவித்தனர். “சர்வதேச சந்தையில் டி.ஏ.பி-யின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்று எங்கள் நிறுவனம் அதை இறக்குமதி செய்தால் 50 கிலோ பைக்கு ரூ.3,750 செலவாகும், மேலும் விலை குறையாது. இதுபோன்ற சூழ்நிலையில் அரசாங்கம் உரங்களுக்கான பட்ஜெட்டைக் குறைக்கும்போது, அதன் அதிகட்ச சில்லறை விலை (MRP) அதிகரிக்கும், விவசாயிகள் இப்போது உரங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ஜலந்தரைச் சேர்ந்த மல்ஷியன் உர விற்பனையாளரான நவ் துர்கா டிரேடர்ஸின் கவுஷல் குப்தா கூறினார்.
விவசாயி குர்தீப் சிங் கூறியதாவது: மானியங்களைக் குறைத்து, வரிகளை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றும் நோக்கில் அரசு செல்கிறது.
உரங்களுக்கான மானியத்தை அறிவிப்பதன் மூலம் பஞ்சாப் அதன் மொத்த பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் மானியத் தொகை சதவீதத்தை இழக்க நேரிடும் என்று உரங்களின் இணை இயக்குநர் (பஞ்சாப்) டாக்டர் ஜே.பி.எஸ். கிரேவால் வாதிட்டார்.
ரசாயனங்களுக்கு பதிலாக கரிம மற்றும் திரவ உரங்களை பயன்படுத்த அரசு வலியுறுத்தி வருவதாகவும், இதனால் ரசாயன உரங்களுக்கான மானியம் குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தின் மற்றொரு மூத்த வேளாண்மைத் துறை அதிகாரி கூறுகையில், பஞ்சாப் மாநிலத்தில் பயிரிடப்படும் பரந்த பகுதிகளில் இயற்கை இடுபொருட்களுக்கு மாறத் தயாராக இல்லை. இதன் விளைவாக, அதன் நுகர்வு விகிதத்திற்கு ஏற்ப மானியத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.
பஞ்சாப் மாநிலம் ஆண்டுதோறும் சுமார் 33-34 லட்சம் மெட்ரிக் டன் உரத்தைப் பயன்படுத்துகிறது. இதில் ரபி மற்றும் கரீஃப் பருவங்களில் 5.50 லட்சம் மெட்ரிக் டன் டிஏபியும், இரண்டு பருவங்களிலும் சுமார் 26-27 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவும் அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”