Budget 2022 lasts only for 92 minutes : இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு நடைபெற்ற இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய இந்த முறை மிகவும் குறைந்த நேரமே எடுத்துக் கொண்டார் நிதி அமைச்சர்.
Union Budget 2022 Live: நடப்பாண்டில் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை – நிர்மலா சீதாராமன்
2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 137 நிமிடங்கள் நீடித்தது. கொரோனா தொற்று காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது வரலாற்றில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட பட்ஜெட் ஆகும். 162 நிமிடங்கள் தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் 137 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார் அவர். சராசரியாக இரண்டு மணி நேரத்தைத் தொடும் அவருடைய பட்ஜெட் உரை இந்த ஆண்டு ஒன்றரை மணி நேரம், அதாவது 92 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
400 வந்தே பாரத் ரயில்கள், விவசாயிகளுக்கான அஞ்சல் ரயில்; ரயில்வே பட்ஜெட் சிறப்பம்சங்கள்
முன்னதாக அதிக நேரம் (133 நிமிடங்கள்) எடுத்துக் கொண்டு 2003ம் ஆண்டு ஜஷ்வந்த் சிங் பட்ஜெட் வாசித்தார். 2014ம் ஆண்டு, பாஜக ஆட்சி பொறுப்பேற்ற முதலாம் ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது 130 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார் அருண் ஜெட்லி. அதன் பின்னர் 2018ம் ஆண்டு 109 நிமிடங்களிலும் 2017ம் ஆண்டு 110 நிமிடங்களிலும்
பட்ஜெட் வாசித்தார் அருண் ஜெட்லி.
இவர்களை தொடர்ந்து அதிக நேரம் பட்ஜெட் வாசித்த நிதி அமைச்சர்கள் பட்டியலில் பிரனாப் முகர்ஜி இடம் பெறுகிறார். 2012ம் ஆண்டு 106 நிமிடங்களில் அவர் பட்ஜெட் வாசித்தார். ப. சிதம்பரம் 2013ம் ஆண்டில் 103 நிமிடங்கள் பட்ஜெட் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil