இந்தியாவில், கிரிப்டோ கரன்சி முக்கிய விவகாரமாக எழுந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதராமன், இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டு இந்த ஆண்டே ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், வரும் ஆண்டில் நாடு 9.27 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
இந்தியாவில் பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ கரன்ஸிகளின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கிரிப்டோ கரன்சிகள் பரிவர்த்தனைக்கான நாணயமாகவும் மூதலீடாகவும் சொத்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கிரிப்டோ கரன்சிகளை சட்டமுறை பணமாக பயன்படுத்த பல நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில், தனி நபர்கள், நிறுவனங்கள் சில கிரிப்டோ கரன்சிகளில் கணிசமான அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புதிய டிஜிட்டல் ரூபாய் 2022-23 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
பிளாக்செயின் தொழில்நுட்பம் கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் மூலம் மாற்றத் தாக்க தரவுகள் அல்லாத (NFTs) விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் ஆகும். இது, ஒவ்வொரு கணமும் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு பிளாக்செயினில், பரிவர்த்தனை பதிவுகளை மாற்றவே முடியாது. ஏனென்றால், பரிவர்த்தனை பதிவு வெளிப்படையானது. உண்மையானது. அதனால்தான், இது கிரிப்டோகரன்சியிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே, டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது கிரிப்டோகரன்சி மற்றும் என்.எஃப்.டி.களின் மூலங்களை பாதிக்கும். இது சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்றம் கண்டுள்ளது.
இதற்கிடையில், டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது கிரிப்டோகரன்சி மற்றும் NFTகளின் ஆதாயங்களையும் பாதிக்கும். கிரிப்டோ கரன்சி சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்றம் கண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2022 தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “டிஜிட்டல் கரன்சி மேலும் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும். எனவே, 2022, 2023 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் பிளாக்செயின் பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது அரசாங்கம் வெளியிடும் மாற்று இல்லாத நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது பிளாக்செயின் ஆதரவுடன் பணத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யப்படலாம். இது மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் என்படு பரவலாக்கப்பட்ட வெர்சுவல் நாணயங்கள், கிரிப்டோ சொத்துக்களிலிருந்து வேறுபட்டது. அவை அரசால் வழங்கப்படவில்லை. ‘சட்டப்பூர்வமான டெண்டர்’ அந்தஸ்து இல்லாதவை. மூன்றாம் தரப்பினர் அல்லது வங்கி தேவையில்லாத உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது பயனருக்கு உதவுகிறது.
சில விதிவிலக்குகளுடன், இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய முற்படும் கிரிப்டோகரன்சிகள் குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தும் ஒரே நாடாக இந்தியா மட்டுமல்ல. அக்டோபர் 2021 இல், நைஜீரியா eNaira-ஐ அறிமுகப்படுத்தியது. இது வட்டி அல்லாத CBDC ஆகும். பஹாமாஸ் மற்றும் கிழக்கு கரீபியனில் உள்ள மற்ற ஐந்து தீவுகளும் CBDCகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதே போல, எல் சால்வடார் (El Salvador) நாட்டில் பிட்காயினை சட்டமுறை பணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“