Budget 2022-Railways: 400 energy-efficient Vande Bharat trains on track, support for farmers: அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 புதிய மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களை இந்தியா தயாரிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, விவசாயிகளைக் கருத்தில் கொண்டு, ரயில்வே துறையானது “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டத்தையும் உருவாக்கும், இது உற்பத்தி பொருட்களை ரயில்வேயில் கொண்டு செல்லப்படுவதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் என்று அமைச்சர் கூறினார். புதிய தயாரிப்புகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம், புதிய வணிகப் பகுதிக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில், பார்சல்களை எடுத்துச் செல்வதற்காக அஞ்சல் ரயில்களையும் ரயில்வே இயக்கும்.
அமைச்சரின் அறிவிப்பின் சிறப்பம்சம், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு பெரிய பன்முகத் திட்டமான பிரதமர் கதி சக்தி திட்ட குடையின் கீழ், ஒரு பகுதியாக புதிய வந்தே பாரத் ரயில்கள் இருக்கும்.
400 புதிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எஃகுக்கு மாறாக, இலகுரக அலுமினியத்தால் உருவாக்கப்பட உள்ளன, இது அதன் பெட்டிகளை தயாரிப்பதற்கான இந்தியாவின் பாரம்பரிய உலோகத் தேர்விலிருந்து விலகுவதைக் குறிக்கிறது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
அலுமினியத்தால் ஆன, ஒவ்வொரு ரயில் பெட்டியும் எடையில் சுமார் 50 டன்கள் எடை குறைவாக உள்ளது, எஃகு மூலம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளை விட மிகக் குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு ரயில் பெட்டியின் விலையும் தற்போதைய ரயில் பெட்டிகளை விட சுமார் 25 கோடி ரூபாய் அதிகமாகும், இது 16 பெட்டிகள் கொண்ட ஒரு பெட்டிக்கு சுமார் 106 கோடி செலவாகும். எவ்வாறாயினும், பணவீக்கம் மற்றும் தற்போதைய எஃகால் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் பிற தொடர்புடைய செலவுகளைக் கணக்கிடும்போது, அலுமினியம் மூலம் செய்யப்படும் செலவு சிறிதளவு அதிகமாக உள்ளது, அதேசமயம் குறைந்த ஆற்றல் வழியாக சேமிக்கப்படும் பணம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வந்தே பாரத் என்பது இந்தியாவின் சொந்த அரை-அதிவேக சுய-இயக்க ரயில் பெட்டிக்கு கொடுக்கப்பட்ட பெயர், இது 16 பெட்டிகளின் தொகுப்பு, அவற்றை இழுக்க இயந்திரம் தேவையில்லை. இது விநியோகிக்கப்பட்ட இழுவை சக்தி என்று அழைக்கப்படுகிறது, இது லோகோமோட்டிவ் இழுத்துச் செல்லப்படும் ரயில்களுக்கு மாறாக, உலகம் முழுவதும் அதிகளவில் வழக்கமாகி வருகிறது.
ரோலிங் ஸ்டாக் திட்டமானது, புதிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள், புதிய உயர் செயல்திறன் கொண்ட சரக்கு இன்ஜின்கள் மற்றும் பிற தயாரிப்புகள் உட்பட, அடுத்த சில ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களைக் குறிக்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, தற்போது “கவாச்” என மறுபெயரிடப்பட்டுள்ள, ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) எனப்படும் உள்நாட்டு மோதல் எதிர்ப்பு அமைப்பு, கடந்த பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் பல்வேறு கட்டங்களில் உள்ளது, இது 2000 கிமீ ரயில் நெட்வொர்க்கை கவனித்து வருகிறது.
ஆகஸ்ட் 15, 2023க்குள் குறைந்தது 75 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்காக, 44 வந்தே பாரத் ரயில்களை செய்யும் பணியில் ரயில்வே ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் 75 வந்தே பாரத் ரயில்கள், 2023க்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் என்று அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil