மத்திய அரசின் முதன்மையான பணப் பரிமாற்றத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துகான (பி.எம் கிசான்) நிதி ஒதுக்கீட்டை 13.33 சதவீதம் குறைத்துள்ளது. 2023-24 ஆண்டுகான மத்திய பட்ஜெட்டில், பி.எம் கிசான் திட்டத்துக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டுகான பட்ஜெட் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.68,000 கோடியை விட 13.33 சதவீதம் குறைவானது.
உண்மையில், நடப்பு நிதியாண்டிற்கான மறுமலர்ச்சி மதிப்பீடுகள் கட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், பி.எம் கிசான் திட்டத்துக்காக உண்மையில் ரூ.66,825 கோடி செலவு செய்யப்பட்டது.
பிஎம்-கிசான் பட்ஜெட் குறைக்கப்பட்டதற்குக் காரணம், இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான் காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பி.எம் கிசான் திட்டத்தின் சமீபத்திய சுற்றில், 8.42-கோடி விவசாயிகள் ஆகஸ்ட்-நவம்பர், 2022 ஆகிய நான்கு மாத காலத்திற்கான தவணைத் தொகையைப் பெற்றுள்ளனர்.
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. அந்தத் தொகையானது தலா ரூ. 2,000 வீதம் 4-மாதங்களுக்கு ஒரு முறை என 3 தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலுக்கு சற்று முன்னதாக, டிசம்பர்-மார்ச், 2018-19 காலகட்டத்திலிருந்து பி.எம் கிசான் திட்டத்தை மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பயனாளிகளுக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளன. டிசம்பர்-மார்ச், 2022-23 காலகட்டத்திற்கான தவணை டிசம்பர் 1, 2022 முதல் நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை எப்போது வேண்டுமானாலும் செலுத்தப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயத் துறையின் மற்ற திட்டங்களில், பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23-ல் ரூ.12,954 கோடி இருந்து 2023-24 பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,787 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது 2022-23-ம் ஆண்டிற்கான புதிய ஒதுக்கீடு ரூ.8,085 கோடியை விட அதிகமாகும்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2023-24 ஆண்டுக்கு ரூ.13,625 கோடி ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடான ரூ.15,500 கோடியைஐ விடக் குறைவாக உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் புதிய மதிப்பீடு ரூ.12,376 கோடியை விட இது சற்று அதிகம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.