பட்ஜெட் 2023: பிரதமர் கிசான் சம்மான் நிதி ஒதுக்கீட்டை 13.33% குறைத்தது மத்திய அரசு - Budget 2023 Central Govt cuts PM Kisan Samman Nidhi allocation | Indian Express Tamil

பட்ஜெட் 2023: பி.எம் கிசான் சம்மான் நிதி ஒதுக்கீட்டை 13.33% குறைத்த மத்திய அரசு

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

union budget, budget 2023, Kisan Samman Nidhi, மத்திய பட்ஜெட், பிஎம் கிசான், பட்ஜெட் 2023, பிஎம் கிசான் பட்ஜெட் ஒதுக்கீடு குறைப்பு, நிர்மலா சீதாராமன், Kisan Samman Nidhi funds, what is Kisan Samman Nidhi, union budget key points, nirmala sitharaman

மத்திய அரசின் முதன்மையான பணப் பரிமாற்றத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துகான (பி.எம் கிசான்) நிதி ஒதுக்கீட்டை 13.33 சதவீதம் குறைத்துள்ளது. 2023-24 ஆண்டுகான மத்திய பட்ஜெட்டில், பி.எம் கிசான் திட்டத்துக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டுகான பட்ஜெட் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.68,000 கோடியை விட 13.33 சதவீதம் குறைவானது.

உண்மையில், நடப்பு நிதியாண்டிற்கான மறுமலர்ச்சி மதிப்பீடுகள் கட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், பி.எம் கிசான் திட்டத்துக்காக உண்மையில் ரூ.66,825 கோடி செலவு செய்யப்பட்டது.

Budget 2023: FM Nirmala Sitharaman Lists Seven Priorities Of Budget

பிஎம்-கிசான் பட்ஜெட் குறைக்கப்பட்டதற்குக் காரணம், இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான் காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பி.எம் கிசான் திட்டத்தின் சமீபத்திய சுற்றில், 8.42-கோடி விவசாயிகள் ஆகஸ்ட்-நவம்பர், 2022 ஆகிய நான்கு மாத காலத்திற்கான தவணைத் தொகையைப் பெற்றுள்ளனர்.

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. அந்தத் தொகையானது தலா ரூ. 2,000 வீதம் 4-மாதங்களுக்கு ஒரு முறை என 3 தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலுக்கு சற்று முன்னதாக, டிசம்பர்-மார்ச், 2018-19 காலகட்டத்திலிருந்து பி.எம் கிசான் திட்டத்தை மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பயனாளிகளுக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளன. டிசம்பர்-மார்ச், 2022-23 காலகட்டத்திற்கான தவணை டிசம்பர் 1, 2022 முதல் நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை எப்போது வேண்டுமானாலும் செலுத்தப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத் துறையின் மற்ற திட்டங்களில், பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23-ல் ரூ.12,954 கோடி இருந்து 2023-24 பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,787 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது 2022-23-ம் ஆண்டிற்கான புதிய ஒதுக்கீடு ரூ.8,085 கோடியை விட அதிகமாகும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2023-24 ஆண்டுக்கு ரூ.13,625 கோடி ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடான ரூ.15,500 கோடியைஐ விடக் குறைவாக உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் புதிய மதிப்பீடு ரூ.12,376 கோடியை விட இது சற்று அதிகம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Budget 2023 central govt cuts pm kisan samman nidhi allocation