2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அவர் அறிவித்தார். வெறும் 87 நிமிடங்களில் மிகக் குறைந்த நேரத்தில் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இது இந்தியா மட்டுமல்லாது அவரின் குறைந்த நேர பட்ஜெட் உரையுமாகும். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-வது முறையாக பட்ஜெட் உரை நிகழ்த்தினார்.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையை “இது அம்ரித் காலின் முதல் பட்ஜெட்” என்று தொடங்கி பேசினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே நரேந்திர மோடி அரசாங்கத்தின் நோக்கம் என்றார். நிதி அமைச்சர் தனது ஐந்தாவது பட்ஜெட் உரையை வெறும் 87 நிமிடங்களில் முடித்தார்.
நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு 92 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார். அதே 2021-ம் ஆண்டு 1 மணி நேரம் 50 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றினார்.
இருப்பினும், 2020 இல், இந்திய வரலாற்றில் 2 மணிநேரம் 40 நிமிடங்கள் என மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியதற்காக அனைத்து சாதனைகளையும் முறியடித்தார். உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர் உரையை குறைக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் இடை இடையே எலெக்ட்ரோலைட்களை பருகுவதைக் காண முடிந்தது.
2019-2020 நிதியாண்டு பட்ஜெட் அவரின் முதல் பட்ஜெட் உரையாகும். அப்போது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பேசினார்.
நரசிம்மராவ் அரசாங்கத்தின் கீழ் 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் அதிகபட்ச வார்த்தைகளின் அடிப்படையில் மிக நீண்ட பட்ஜெட் உரை நிகழ்த்தப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் 18,650 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் 2018 பட்ஜெட் உரையில் மொத்தம் 18,604 வார்த்தைகள் இருந்தன. 1977 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் மொத்தம் 800 வார்த்தைகளைக் கொண்ட மிகக் குறுகிய நேர பட்ஜெட் உரைக்கான சாதனையைப் படைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/