Budget 2023 Tamil News: நாடாளுமன்ற மக்களவையில் 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்திற்கு (எம்ஹெச்ஏ) ரூ.1.96 லட்சம் கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1.85 லட்சம் கோடியை விட 6 சதவீதம் அதிகமாகும். 2021-22 ஆம் ஆண்டில், பட்ஜெட்டில் உள்துறைக்கு ரூ 1.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், உள்துறைக்கான மூலதனச் செலவு கடந்த பட்ஜெட்டில் ரூ.15,924 கோடியிலிருந்து இந்த பட்ஜெட்டில் ரூ.18,018 கோடியாக அதிகரித்துள்ளது.
வரும் நிதியாண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக ஒதுக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகப் பங்கு காவல்துறைக்கு சென்றுள்ளது. இதில், கடந்த பட்ஜெட்டை விட, 18,018 கோடி ரூபாய், மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில், காவல்துறைக்கான ஒதுக்கீடு ரூ.1.17 லட்சம் கோடியாக இருந்தது, அதில் ரூ.10,500 கோடி மூலதனச் செலவு ஆகும்.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offerஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கடந்த பட்ஜெட்டைப் போலவே இந்த பட்ஜெட்டில் ரூ.35,581 கோடி வழங்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.5,987 கோடியும், லடாக்கிற்கு ரூ.5,958 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கடந்த மற்றும் அதற்கு முன்பும் ஒதுக்கப்பட்டது இதே அளவு தொகையே ஒதுக்கப்பட்டு இருந்தது. டெல்லிக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.977 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,168 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்கான ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டில் ரூ.300 கோடியாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.1,258 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் (CRPF), பிஎஸ்எஃப் (BSF), ஐ டி பி பி (ITBP), எஸ்எஸ்பி (SSB), சிஐஎஸ்எஃப் (CISF), மற்றும் அசாம் ரைபிள் போலீஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (CAPFs) கடந்த பட்ஜெட்டில் ரூ.87,444 கோடியாக இருந்த இந்த பட்ஜெட்டில் ரூ.94,665 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லை உள்கட்டமைப்பு மேலாண்மைக்கு முந்தைய பட்ஜெட்டில் ரூ.2,744 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய ஏஜென்சிகளில், புலனாய்வுப் பணியகத்துக்கு, கடந்த பட்ஜெட்டில், 3,168 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில், 3,418 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் டெல்லி காவல்துறைக்கான ஒதுக்கீடு ரூ.10,096 கோடியில் இருந்து ரூ.11,662 ஆக அதிகரித்துள்ளது.
இப்போது பிரதமரைப் பாதுகாக்கும் 3,000 பேர் கொண்ட சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கான (SPG) ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் ரூ.385.95 கோடியிலிருந்து ரூ.433.59 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய போலீஸ் அமைப்புகளான போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ.1,147 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறைகளை நவீனப்படுத்த கடந்த பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil