தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவுப்பு வெளியாகி உள்ளது.
2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது.
தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தங்கம், வெள்ளிக்கான சுங்கவரி 6 சதவீதம் ஆகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 % குறைந்துள்ளது.
சுங்கவரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
சென்னை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 95.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“