Advertisment

பீகாருக்கு ரூ.11 கோடி வெள்ள தடுப்பு நிதி; மகிழ்ச்சியில் ஜே.டி.யு: தலைவர்கள் கூறுவது என்ன?

வட பீகாரில் 76% மக்கள் வெள்ள அபாயத்தில் வாழ்கிறார்கள், நேபாளத்தை உள்ளடக்கிய தீர்க்க முடியாத சிக்கலைச் சமாளிக்க இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் உதவியாக இருக்கும் என்று ஜே.டி.யு கருதுகிறது.

author-image
WebDesk
New Update
Floo Bih

2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.11,500 கோடி வெள்ள தடுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள பீகாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இது கட்சி அரசை தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுள்ளது என்று கூறியது.

Advertisment

"நேபாளத்தில் இருந்து வெள்ளக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் பற்றிய பீகாரின் முக்கியமான பிரச்சினையில் கவனம் செலுத்துவது நீண்ட காலமாக உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், இப்போது நிதி கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”என்று  ஜே.டி.யு தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

நீர்ப்பாசனப் பயன் திட்டம் மற்றும் பிற திட்டங்களுக்கு வழி வகுக்கும் இந்த ஒதுக்கீடு - "பத்தாண்டுகள் பழமையான சவாலை எதிர்கொள்வதன் மூலம் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான கட்சியின் முயற்சிகளுக்கு" உந்துதலைக் கொடுக்கும் என்று ஜா மேலும் கூறினார்.

மூத்த ஜேடி(யு) தலைவர் ஒருவர் கூறுகையில், அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில், சாலைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் ஓரளவிற்கு அதிகாரத்தையும் நிதிஷ் வழங்கியுள்ளார், ஆனால் "ஆண்டாண்டு காலமாக பீகார் உடன்  உள்ளடக்கிய நேபாள நாட்டுடன் வரும் வெள்ளத்துடன் போராடி வருகிறார்." என்றார்.

பீகார் இந்தியாவின் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாகும், வடக்கு பீகாரின் மக்கள் தொகையில் 76% பேரழிவுகரமான வெள்ளத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர்.

இந்தியாவின் வெள்ளம் பாதித்த பகுதியில் 16.5% மாநிலம் மற்றும் இந்தியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் 22.1%  இங்கு உள்ளது. பீகாரின் புவியியல் பகுதியில் சுமார் 73.06% வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க:   In Budget’s largesse for Bihar, JD(U) most pleased about flood mitigation package

ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும், நேபாள ஆறுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர்,  அதிகப்படியான நீரின் காரணமாக, பல வட பீகார் மாவட்டங்கள் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும். பல ஆண்டுகளாக, இந்த வெள்ளத்தில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் சேதமடைவதைத் தவிர, ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். 

இந்த பிரச்சனை மாநிலத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக உள்ளது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட கோசி பெல்ட்டில் உள்ள சில வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்தன.

"கடந்த 40 ஆண்டுகளாக நேபாளம் இதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக நான் (நிதி அமைச்சர்) நிர்மலா சீதாராமனை சந்தித்தேன், அவர் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினார். இதில் சீனா காரணியும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. 

அணைகளின் வடிவமைப்புகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் கிடைத்த வெற்றி,” என்று பீகார் அரசாங்கத்தில் முன்பு நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஜா கூறினார்.

பீகாரில் வெள்ள பாதிப்புக்கு பட்ஜெட்டில் இந்த அளவு கவனம் செலுத்துவது இதுவே முதல் முறை என்று கூறிய மற்றொரு ஜே.டி.(யு) தலைவர், “நேபாளத்தில் அணை கட்டும் பணி மெதுவாக நடப்பது குறித்து நிதியமைச்சர் தெளிவாக பேசியுள்ளார். ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளை உள்ளடக்கிய வெள்ளத்தைத் தணிக்க பீகாருக்கு ரூ.11,500 கோடி கிடைக்கும். இது பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட உதவும்.

மக்களவையில் 12 இடங்களுடன், 16 இடங்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடி(யு) இரண்டாவது பெரிய கூட்டணியாக உள்ளது.

வெள்ள நிவாரண நிதி தவிர, பீகாரில் சாலை இணைப்பு திட்டங்களுக்கு ரூ.26,000 கோடியும், மின் திட்டத்துக்கு ரூ.21,400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு வங்கி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுத் தரவும்,  சுகாதாரம், விமானப் போக்குவரத்து மற்றும் விளையாட்டு துறைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பீகாருக்கு உதவும் என்று உறுதியளித்தது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment