Advertisment

ஆந்திராவுக்கு பட்ஜெட் பூஸ்ட்: சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவை நனவாக்க ரூ.15,000 கோடி; முதலீட்டை ஈர்க்க 2 தொழில் வழித்தடம்

ராயலசீமா, பிரகாசம் மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச மாவட்டங்களுக்கு சிறப்பு பின்தங்கிய பகுதி நிதியையும் நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
ap BUDGET

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) வெளியிட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதியை அறிவித்தார், இது மாநிலத்தின் தலைநகராக அமராவதியை மேம்படுத்துவதில் முக்கியமானது மற்றும் முதல்வர் சாந்தபாபு நாயுடுவின் கனவுத் திட்டமாகும். 

Advertisment

இந்த நிதியாண்டிலேயே ரூ.15,000 கோடி விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இதற்கு வரும் ஆண்டுகளிலும் சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும் என்றும்  நிர்மலா சீதாராமன் கூறினார். தொடர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்க்க  விசாகப்பட்டினம்-சென்னை-ஓர்வகல்-ஹைதராபாத் தொழில்துறை வழித்தடம்  மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடம் நிறுவப்படும் என்றும்  நிதியமைச்சர்  அறிவித்தார்.

ராயலசீமா, பிரகாசம் மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச மாவட்டங்களுக்கு சிறப்பு பின்தங்கிய பகுதி நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014ன் கீழ் ஆந்திரப் பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு உதவும் என்று அவர் கூறினார். மேலும் மத்திய அரசு நிதியுதவி அளித்து, பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்தை முடிக்க உதவும் என்றும் அவர் அறிவித்தார். 

ஆங்கிலத்தில் படிக்க:   Budget boost for Andhra Pradesh: Rs 15,000 crore to make Chandrababu Naidu’s Amravati dream come true, 2 industrial corridors to attract investment

ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) புதிய சாலைகள் மற்றும் நீர் குழாய்கள் அமைக்க நிதி உதவியை நாடியது, இதற்கு ஒப்புதல் அளித்த நிதியமைச்சர் இது தவிர மாநிலத்தில் ரயில்வே இணைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதியளித்தது.

பட்ஜெட்டுக்கு முன்னதாக, நாயுடு டெல்லிக்கு 3 முறை பயணம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட கேபினட் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினார். 

அமராவதிக்கு ரூ.15,000 கோடி என்பது முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது கட்சியான டி.டி.பிக்கும், பணப்பற்றாக்குறையில் உள்ள அவரது மாநிலத்திற்கும் ஒரு பெரிய ஊக்கமாகும். நாயுடு இறுதியாக 2014 முதல் 2019 வரை மாநிலம்  பிரிக்கப்பட்ட பின்னர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்ப கனவு கண்ட திட்டமாகும்.  மேலும் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரத்தை இழந்த பிறகு அதை பாதியிலேயே விட்டுவிட வேண்டியிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nirmala Sitharaman Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment