உத்தரப் பிரதேசம் : பசுக் கொலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை பசுக்காப்பாளர்கள் கொலை செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் போலீஸ் :
உத்தரப் பிரதேசம் புலந்த்ஷர் கிராமத்தில் பசுக் கொலைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர் பசுக் காவலர்கள். அப்போது நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது அப்பகுதி காவல் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர்.
மறைந்த போலீஸ் அதிகாரியின் மணைவி இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்
இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த காவல்துறை அதிகாரி ஷுபோத் குமார் சிங் என்பவர் தாக்கப்பட்டார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஷுபோத் குமார் சிங்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
ஷுபோத் குமார் சிங்கை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மகன்கள்
பின்னர் இது குறித்து கூடுதல் ஆணையர் அனந்த் குமார் கூறுகையில், “போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் படி ஷுபோத் உடலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்திருப்பதும், கனத்த ஆயுதங்களால் தாக்கப்பட்ட தழும்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டா இடது புறம் புருவத்தின் அருகே பாய்ந்துள்ளது. அவரின் துப்பாக்கி மற்றும் செல்போன் இன்னும் கைப்பற்றப்படவில்லை. அதனை கண்டு பிடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.
கொல்லப்பட்ட போலீஸ் குடும்பத்தினர்
மேலும் அதே பகுதியில் நண்மனை டிராப் செய்வதற்காக வந்திருந்த வாலிபர் சுமித் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்ட போலீஸ் ஷுபோத் குமார் சிங் உடலுக்கு அரசு மரியாதை
ஷுபோத் உடலுக்கு இன்று அரசு மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது. மேலும் மறைந்த போலீஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பு தொகை அளிக்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்தனார் அறிவித்துள்ளார்.