8 ஆண்டுகால ஆட்சி நிறைவு: புல்டோசர் பாபா 'யோகி' முன்னேற்றம் தரும் மனிதராக மாற முயற்சி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்று உள்ளார் யோகி. மகா கும்பமேளா வெற்றியைத் தொடர்ந்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்று உள்ளார் யோகி. மகா கும்பமேளா வெற்றியைத் தொடர்ந்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 8 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மாநிலத்தின் நீண்ட கால முதலமைச்சராக பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் யோகி ஆதித்யநாத்.

Advertisment

பா.ஜ.க-வின் மிக முக்கியமான முகமான யோகியின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு, இந்துத்துவா, மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மற்றும் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான உத்வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பதவியேற்றதில் இருந்தே யோகி அரசு, மாநிலம் முழுவதும் உள்ள குற்றவாளிகளை ஒடுக்குவதன் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் முன்னுரிமை அளித்தது. இது தொடர்பாக சில நடவடிக்கைகள் சர்ச்சைகளைத் தூண்டின. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் மீது புல்டோசர் மூலம் நடவடிக்கை எடுத்தல், குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தல் உள்ளிட்ட நடைமுறை குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்கள் விசாரணை வரை சென்றது.

2022 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை மீண்டும் ஆட்சிக்குக்கொண்டு வந்ததிலிருந்து, யோகி ஆதித்யநாத் தற்போது சட்டம்-ஒழுங்கு மீதான நெருக்கடிகளை நிறுத்திவிட்டு, "விகாஸ்" (வளர்ச்சி) மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தனது கவனத்தைத் திருப்பினார். நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான உ.பி.யில் 1 டிரில்லியன் டாலர் இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார், முதலீட்டு உச்சிமாநாடுகளை நடத்தியுள்ளார். மேலும் முதலீட்டை ஈர்க்க கொள்கை மாற்றங்களைச் செய்துள்ளார்.

யோகி அரசு 1.0

Advertisment
Advertisements

2017 சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க.-வின் 23 பக்க தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. மார்ச் 19, 2017 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆதித்யநாத் அரசாங்கத்தின் முதல் முடிவு, மாநிலத்தில் உள்ள 80 லட்சத்திற்கும் மேற்பட்ட விளிம்புநிலை விவசாயிகளின் சுமார் ரூ.36,000 கோடி மதிப்புள்ள கடன் தள்ளுபடி செய்வதாகும். பின்னர், "ஈவ்-டீசிங்கைத் தடுத்தல்" மற்றும் "பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற கட்டளையுடன், காவல்துறையினரைக் கொண்ட 'ரோமியோ எதிர்ப்புப் படைகள்' அமைக்கப்பட்டன.

பிப்.2018-ல், ஆதித்யநாத் அரசாங்கம் தனது முதல் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தியது. இதில் பிரதமர் மோடி மற்றும் நாட்டின் உயர்மட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இது மாநிலத்தின் பிம்பத்தை மாற்றுவதற்கான யோகியின் முயற்சியை ஊக்குவித்தது.

2019 கும்பமேளா மற்றும் 2025 மகா கும்பமேளாவுக்கு முன்பு, பிரயாக்ராஜ் மேளா ஆணைய அலகாபாத் சட்டம், 2017 மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாத் விசேஷ க்ஷேத்ர விகாஸ் பரிஷத் வாரணாசி சட்டம், 2018 ஆகியவற்றை நிறைவேற்றியது. இது குறிப்பாக காசி விஸ்வநாத் வழித்தடத்தின் மேம்பாட்டிற்காகவே நோக்கமாகக் கொண்டது. சட்டம்-ஒழுங்கில் உத்தரபிரதேசத்தை "முன்மாதிரி மாநிலமாக" முன்னிறுத்தும் முயற்சியில், யோகி அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தது. அவற்றில் உத்தரபிரதேச பசு வதை தடுப்பு சட்டம், 2020 அடங்கும். சட்டவிரோதமாக பசுவை கொண்டு செல்வோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். 

உத்தரபிரதேச பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் மீட்புச் சட்டம் 2020-ல் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) எதிரான போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களின் சுவரொட்டிகளை பொது இடங்களில் ஒட்டவும் , சேத மீட்பு அறிவிப்புகளை வழங்கியது. பின்னர் மத மாற்ற வழக்குகளைத் தடுக்க, உத்தரப் பிரதேச சட்டவிரோத மத மாற்றத் தடைச் சட்டம், 2021-ஐ கொண்டு வந்தது.

"என்கவுன்டர்களில்" கொல்லப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை குறித்து ஆதித்யநாத் அரசாங்கம் சர்ச்சையை எதிர்கொண்டது. முதல் 10 மாதங்களில், மாநில காவல்துறையால் 900க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் பல்வேறு நீதிமன்றங்களும் இதைக் கவனத்தில் கொண்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத சொத்துக்களை இடிக்க அரசாங்கம் புல்டோசர்களை அனுப்பியது. இதன் மூலம் ஆதித்யநாத்துக்கு "புல்டோசர் பாபா" என்ற பட்டப்பெயர் கிடைத்தது. இந்த வலிமையான பிம்பத்தை பா.ஜ.க. சரியாக பயன்படுத்தியது. நாடு முழுவதும் நடந்த தேர்தல்களில் யோகி ஆதித்யநாத்தை நட்சத்திர பேச்சாளராக களமிறக்கியது.

உத்தரப் பிரதேச அதிகாரிகள் சொத்துக்களை இடித்ததற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. குடிமக்களின் சொத்துக்களை இடிப்பதில் வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுவதை நீதிமன்றம் ஆணையிட்டது.

யோகி அரசு 2.0

மார்ச் 25, 2022 அன்று யோகி 2-வது முறையாக உ.பி. முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் எடுத்த அதிரடியான முடிவு பா.ஜ.க.வின் வெற்றிக்குப் பின் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்றான இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிப்பதாகும்.

உத்திரப்பிரதேசத்தை பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலமாக வளர்ப்பதில் கவனம் செலுத்தியது. 2029-க்குள் $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை நிர்ணயித்தது. இது ஒவ்வொரு துறைக்கும் பல கொள்கைகளைத் திருத்தி வெளியிட்டது. வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான சலுகைகளை வழங்கியது. இதில் முத்திரை வரி விலக்குகள் மற்றும் மானிய விலையில் நிலம், கடன்களுக்கான வட்டி திருப்பிச் செலுத்துதல், மூலதன மானியம் ஆகியவை அடங்கும்.

முதலீட்டாளர்களைச் சென்றடைய நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுக்கள் அனுப்பப்பட்டன. பிப்ரவரி 2023 உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், அரசாங்கம் ரூ.40 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை ஈர்த்ததாகக் கூறியது. 

ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானத்தை முடிப்பதில் அரசாங்கத்தின் கவனம் திரும்பியது. யோகி அரசு மத சுற்றுலாவை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தது, சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு மதத் தலங்களுக்கான மேம்பாட்டு அதிகாரிகளை அமைத்தல் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது. 2024 மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பா.ஜ.க.-வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மொத்தமுள்ள 80 இடங்களில் 33 இடங்களை மட்டுமே பெற்றது. சமாஜ்வாடி கட்சி (SP) 37 இடங்களைப் பெற்றது. அயோத்தி (ஃபைசாபாத்) தொகுதியையும் சமாஜ்வாடி கட்சியிடம் இழந்தது யோகி அரசு. 

2024 இறுதிக்குள், உலகின் மிகப்பெரிய மதக் நிகழ்வான மகா கும்பமேளாவை நடத்துவதில் ஆதித்யநாத் அரசு தனது கவனத்தைத் திருப்பியது. 45 நாள் விழாவை ஏற்பாடு செய்து பிரபலப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஜனவரி பிப்ரவரி 2025-ல் நடந்த மகா கும்பமேளாவில் 66 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இது பொருளாதாரத்திற்கும் ஒரு உத்வேகத்தை அளித்தது. இருப்பினும், ஜனவரி 29 அன்று, விழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

பா.ஜ.க.-வின் 2022 தேர்தல் அறிக்கையில் இதுவரை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் ஒன்று, தகுதிவாய்ந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டி விநியோகம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பயனாளிகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

Yogi Adityanath Up Cm Yogi Adhityanath

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: