வாயை, கண்ணை கட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினால் மோட்சம்...டெல்லி 11 பேர் மரணத்தில் டைரி சொன்ன குறிப்பு!

மனித உடல் தற்காலிகமானது. என்றும் நிரந்தரமில்லை. கண்ணையும்,வாயையும் கட்டிக் கொள்ளுங்கள்.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு அமானுஷ்ய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் குடும்பம் ஒன்று ஒரே வீட்டில் கண் மற்று வாயை கட்டியவாறு பிணமாக கிடந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் பலருக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

77 வயதான நாராயணி தேவி என்ற மூதாட்டி தனது இரண்டு மகன்கள், மகள்கள், மருமகள்கள், பேத்தி, பேரனுடன் சேர்ந்த கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிந்து வந்தார். நாராயணி தேவியின் மகன்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களின் மளிகை கடை திறக்கப்படாததால் ஊழியர்கள் வீட்டிற்கு நேரடியாக வந்துள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் பதற்றம் அடைந்த அவர்கள், ஜன்னலை உடைத்து வீட்டினுள் நுழைந்து பார்த்த போது அந்நிமிடமே அதிர்ச்சியில் உறைந்து போயியுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கண் மற்றும் வாயை கட்டியவாறு வீட்டில் பிணமாக கிடந்தனர். தகவலறிந்து சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் அனைவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் இந்த சம்பவம் தற்கொலையாக தான் இருக்கும் சந்தேகப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்பு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதாட்டி நாராயணி தேவி அறையில் இருந்த டைரி ஒன்றை போலீசார் படித்துள்ளனர். அதில் அந்த மூதாட்டி பல நாட்களாக இறந்து போன தனது கணவருடன் பேசி வருவது போல் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது? நாள்தோறும் செய்து வரும் நல்லது, கெட்டது என அனைத்தையும் டைரியில் எழுதி வந்துள்ளார். 1 மாதத்திற்கு முன்பு அவரின் கணவர் தனது பேரனின் கணவில் வந்து சொன்னதை கூடிய விரைவில் ஒட்டுமொத்த குடும்பமும் நிறைவேற்றுவும்.. அதுவரை காத்திருங்கள் என்று மூதாட்டி எழுதிருப்பதில் தான் இந்த சம்பவத்தின் அமானுஷ்ய தடயங்கள் தொடங்குகிறது.

வீட்டில் இருந்த 11 நபர் தான் ஒட்டுமொத்த பேரையும் கொன்று விட்டு, அவர்களின் கை மற்றும் கால்களை கட்டில் கயிற்றில் தொங்கவிட்டு பின்பு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் யூகித்துள்ளனர்.அதே நேரம் இவர்கள் வீட்டில் வளர்ந்த நாய் ஒன்றையும் அதே நபர் தான் மாடியில் கட்டி வைத்துள்ளார். மத ரீதியாக நடத்தப்பட்ட இந்த கொலை அல்லது தற்கொலை அந்த பகுதியில் வசிப்பவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூதாட்டியின் அறையில் கிடந்த டைரியில் இருக்கும் கடைசி பக்கம் சொல்லும் செய்தி.. ”மனித உடல் தற்காலிகமானது. என்றும் நிரந்தரமில்லை. கண்ணையும்,வாயையும் கட்டிக் கொள்ளுங்கள். பயத்தை விட்டு விடுங்கள், சொர்க்கமும் மோட்ட்சமும் நிச்சயம். இதை செய்ய ஞாயிறு அல்லது வியாழக்கிழமையை தேர்ந்தெடுங்கள். ஆலமரம் விழுது கடவுளை போன்றது. மேலே கை நீட்டுங்கள் துப்பாட்டா அல்லது கயிறு கிடைக்கும். வயதானவர்களால் இதை செய்ய முடியாது என்றால் அவர்கள் வேறு அறையில் படுத்துக் கொள்ளலாம்” என்று மர்மங்கள் நிறைந்த வரியாக உள்ளது.

இந்த வரிகள் சொன்னது போலவே, அந்த வீட்டில் இருந்த 10 பேரும் கயிறில் தொங்கியப்படி இருந்தன மூதாட்டி மட்டுமே தான் தரையில் சடலமாக கிடந்தார். இதில் அதிர்ச்சி அளிக்கும் மற்றொரு தகவல் என்வென்றால் இறந்த 11 பேரின் ஆன்மாவும் வெளியேற வீட்டின் பின்புறத்தில் 11 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

11 குழாய்கள்

11 குழாய்கள்

இந்த நவீன உலகத்தில் இப்படி ஒரு அமானுஷ்ய தற்கொலை அல்லது கொலை நிகழ்ந்திருப்பது கேட்பவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close