செல்பி, விளம்பரம், சிறப்பு விருந்தினர் என பிஸியாகவே இருக்கும் டூப்ளிகேட் கோலி…..

busy life of this Virat Kohli lookalike : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை போன்று தோற்றமுடைய சவுரப் காடேவுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடையே ஆதரவு கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது.

virat kohli, virat kohli look alike, saurabh gade, virat kohli doppelganger, kohli doppelganger, saurabh gade virat kohli doppelganger
virat kohli, virat kohli look alike, saurabh gade, virat kohli doppelganger, kohli doppelganger, saurabh gade virat kohli doppelganger,  விராட் கோலி, சவுரப் காடே, மகாராஷ்டிரா, டூ்ப்ளிகேட் கோலி, செல்பி, விளம்பரம்

Devendra Pandey

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை போன்று தோற்றமுடைய சவுரப் காடேவுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடையே ஆதரவு கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சவுரப் காடே. பன்னாட்டு நிறுவனத்தில் இவர் ஜூனியர் இஞ்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். விராட் கோலியை போன்று இவரது தோற்றம் உள்ளதால், பெரும்பாலானோர், இவரிடம் ஆட்டோகிராப் வாங்கியும், போட்டோ எடுத்துக்கொண்டும் உள்ளனர். இதனால், அவர் நிஜ கோலியை விட எப்போதும் பிஸியாகவே உள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலம் சிரூர் பகுதியை சேர்ந்த உள்ளூர் எம்எல்ஏ, தேர்தல் பிரசாரத்துக்கு விராட் கோலியை, அழைத்து வருவதாக வாக்காளர்களிடம் உறுதியளித்திருந்தார். அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த டூப்ளிகேட் கோலியை காட்டினார். மக்களும் அதை நம்பிவிட்டனர்.

இந்த டூ்ப்ளிகேட் கோலிக்கு தினந்தோறும் மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. உள்ளூர் ஆடை வர்த்தக நிறுவனம், தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இந்த கோலியையே, போட்டோஷூட் நடத்தி பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபால், அங்கு நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும், இந்த டூ்ப்ளிகேட் கோலி தவறாமல் பங்கேற்று வருகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், இந்த டூ்ப்ளிகேட் கோலி, ஒருமுறை கூட, விராட் கோலியை சந்தித்ததில்லை. ஒருமுறை, இந்திய வீரர்கள் பயணம் செய்யும் வாகனத்துக்கு அருகே சென்றபோது, தோனியே, கோலி, ஏன் இன்னும் வாகனத்துல ஏறாம இருக்கிறார் என்று கூறியதை டூ்ப்ளிகேட் கோலி, அடிக்கடி கூறி பெருமைப்பட்டு கொள்கிறார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Busy life of this virat kohli lookalike

Next Story
இரு கால்களுமின்றி கிளிமஞ்சாரோ உச்சம் தொட்ட சாதனையாளர் – அடுத்த இலக்கு எவரெஸ்ட்Double amputee who scaled Kilimanjaro raises bar, next target Mount Everest says - இரு கால்களுமின்றி கிளிமஞ்சாரோ மலை உச்சியைத் தொட்ட சாதனையாளர் - அடுத்த இலக்கு எவரெஸ்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com