கர்நாடகாவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தோசை சுடும் வீடியோ புதன்கிழமை (ஏப்.26) ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரியங்கா, “இன்று காலை புகழ்பெற்ற மயால்ரி ஹோட்டல் உரிமையாளர்களுடன் தோசை சுட்டு மகிழ்ந்தேன்.
நேர்மையான, கடின உழைப்பு நிறுவனத்திற்கு என்ன ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி. தோசைகளும் ருசியாக இருந்தன. என் மகளை மைசூருவுக்கு அழைத்து வருவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவில், பிரியங்கா ஹோட்டலின் சமையலறையில் தோசை சுடுவதை காணலாம். பின்னர், அந்த இடத்தில் தோசை சாப்பிட்டு மற்ற பார்வையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைவர் டி கே சிவகுமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) கர்நாடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் ஹோட்டலில் இருந்தனர்.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட மற்றொரு வீடியோவில், பிரியங்கா தோசைகளைப் புரட்டுவதைக் காண முடிந்தது. “தோசைகள் ஆரம்பம்தான்; திறமையான கைகளால், உலகிற்கு கொண்டு வரக்கூடிய சக்திக்கு எல்லையே இல்லை, ”என்று காங்கிரஸ் தரப்பில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
மேலும் டி.கே. சிவக்குமார் ட்விட்டரில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “ஸ்ரீமதியுடன் ஒரு உண்மையான சிறப்பு காலை உணவுடன் நாள் தொடங்கியது.
@PriyankaGandhi மைசூருவில் உள்ள 80 ஆண்டுகள் பழமையான மைலாரி ஹோட்டலில். இங்குள்ள உணவு உங்கள் வயிற்றை மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் நிரப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா புதன்கிழமை மைசூரு மற்றும் சாமராஜநகர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து, சிருங்கேரியில் தனது உரையில், பிரியங்கா தனது பாட்டி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுகளைத் தூண்டி, கர்நாடகாவுடனான தனது தொடர்பைப் பற்றி பேசினார்.
அப்போது, “சிக்மகளூருக்கு இந்திரா ஜி வந்தபோது, அது அவருக்குப் போராட்டக் காலம். அந்த இக்கட்டான சமயங்களில் சிக்மகளூர் மக்கள் அவருக்கு துணையாக நின்றார்கள். இன்று ராகுலுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் போராட்ட காலம். நாட்டு மக்கள் எங்களுடன் நிற்பார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“