Advertisment

இடைத் தேர்தல் முடிவுகள்: மே.வங்கத்தில் டி.எம்.சி ஸ்வீப்; இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி!

3 மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஸ்வீப் செய்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், ம.பி.யில் பாஜக தனது தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Bypoll 2021 Results, TMC sweeps Bengal, cheer for Cong in Himachal Rajasthan, congress, BJP holds MP, இடைத் தேர்தல் முடிவுகள், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி, மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி, karnataka, telangana, TRS, Rahul Gandhi, RJD, Bihar

29 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், மே.வங்கத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு பாஜக வசம் இருந்த தின்ஹாடா தொகுதியில் உதயன் குஹா 1 லட்சத்து 63 ஆயிரத்து 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisment

இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவைத் தொகுதியை பாஜகவிடம் இருந்து கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சி 18,725 மற்றும் 20,606 வாக்குகள் வித்தியாசத்தில் தரியாவாத் மற்றும் வல்லப்நகர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தின் பாஜகவின் பாரம்பரிய தொகுதியான ராய்கானையும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு இடத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இருப்பினும், எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியான ஜோபாட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரித்விபூர் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இழந்தது. அதே நேரத்தில், பாஜக தனது கந்த்வா மக்களவைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. அசாமில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவின் ஹுசுராபாத்தையும் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியிடம் இருந்து பாஜக கைப்பற்றியது.

பீகாரில் குஷேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராபூர் ஆகிய இரு தொகுதிகளையும் ஆளும் ஜேடியூ கட்சி தக்கவைத்துக் கொண்டது. சிவசேனா கட்சி தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி லோக்சபா தொகுதியை கைப்பற்றியது. எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், இது டெல்லியை நோக்கிய மாபெரும் பாய்ச்சல்" என்று தெரிவித்தார். இதனிடையே, என்.பி.பி தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸிடம் இருந்து ராஜபாலா மற்றும் மவ்ரிங்க்னெங் தொகுதிகளில் வெற்றி பெற்று 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸின் ஒவ்வொரு வெற்றியும் எங்கள் கட்சித் தொண்டர்களின் வெற்றி. வெறுப்பை எதிர்த்துப் போராடுங்கள். பயமில்லை!” என்று தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் பாரம்பரிய பாஜக தொகுதியான ராய்கான், மகாராஷ்டிராவின் டெக்லூர் மற்றும் கர்நாடகாவின் ஹனகல் ஆகிய இடங்களையும் காங்க்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Congress West Bengal Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment