இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மேலிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், தலைமைக்கு நெருக்கமானவர் அல்ல என்றாலும், தனது மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு, மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டில் கட்சிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். அதேபோல, ஒரே மக்களவை தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றி தற்போது ஹிமாச்சலில் பாஜகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சலில் 3 சட்டப்பேரவை தொகுதியும், மாண்டி மக்களவைத் தொகுதியும் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.இது பாஜக தலைவர் ஜேபி நட்டா தனது சொந்த மாநிலத்தில் கட்சியின் செயல்பாட்டிற்கு ஏன் எதுவும் செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு வழிவகுத்தது
இதேபோல், மத்திய அமைச்சராக அஸ்வனி வைஷ்ணவு பொறுப்பேற்றதும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி இடைத்தேர்தலின் பொறுப்பாளராக முதல் அரசியல் பணி வழங்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை கடிதம்
கேரளாவின் பாஜக பிரிவை கையாளுவது தலைமைக்கு எப்போதும் சிக்கலாக தான் இருக்கும். பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் பி பி முகுந்தன் அனுப்பிய கடிதத்தில், கேரளாவில் 2019 பொதுத் தேர்தலுடன் சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல் வாக்குகளை ஒப்பிடும்போது கட்சியின் வாக்கு சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
தற்போதைய தேர்தல் தவறான அணுகுமுறையைக் காட்டுகிறது. இதை பார்க்கையில், பாஜக 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்ட உண்மையை யாராலும் மறுக்க முடியாது. தேவையற்ற பெருமை மற்றும் அணுகுமுறையை அகற்றுவதற்கான நேரம் இது. கேரள பாஜகவின் எதிர்காலம் குறித்து தேசியத் தலைமை பிரைன் ஸ்டார்மிங் சேஷன் நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
மோடி - உக்ரைன் அதிபர் சந்திப்பு
இந்தியாவும், ரஷியாவும் மூலோபாய கூட்டாளிகள் ஆகும். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
அப்போது, இரு நாடுகளும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரித்தது உட்பட, தொற்றுநோய் காலங்களில் ஒத்துழைப்புடன் பணியாற்றியதாகத் திருப்தி தெரிவித்தனர்.
இந்தாண்டு, தொற்றுநோயின் 2 ஆம் அலையின் போது இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவியதற்காக உக்ரைன் தலைவருக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
இதில் முக்கியமானது, 2014 முதல் கெய்வ் மற்றும் மாஸ்கோ இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கிழக்கு உக்ரைனில் உக்ரேனிய துருப்புக்களுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதப் படைகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இதில் 14,000 பேர் கொல்லப்பட்டதாக கியேவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.