எதிர்க்கட்சிகள் சிஏஏ பற்றி தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டுகிறார்கள் – அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாகவும், நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்.

By: Updated: February 28, 2020, 09:28:06 PM

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாகவும், நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார்.

அண்மையில் டெல்லியில் நடந்த வன்முறையில், 42 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரச் சம்பவத்துக்கு பிறகு ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். அவர் இந்த கூட்டத்தில் பேசுகையில், “சிறுபான்மையினர் குடியுரிமையை இழக்க நேரிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி), சமாஜ்வாடி கட்சி(எஸ்பி), கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்கள், மம்தா ஆகியோர் சிஏஏவுக்கு எதிராக, சிறுபான்மையினர் குடியுரிமையை இழப்பார்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்? CAA என்பது குடியுரிமையை வழங்குவதற்கான ஒரு சட்டம், இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல.” என்று கூறினார். மேலும், எந்தவொரு இந்திய முஸ்லிமும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று அமித்ஷா மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “நான் இன்று மீண்டும் இங்கு கூற விரும்புகிறேன். சிஏஏ முஸ்லிமின் குடியுரிமை உரிமைகளை பறிக்கப் போவதில்லை. நாட்டின் சிறுபான்மையினரின் குடியுரிமைகளை பறிக்கப் போவதில்லை” என்று கூறினார்.

ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவருமான நவீன் பட்நாயக் டிசம்பர் மாதம் சிஏஏவுக்கு “இந்திய குடிமக்களுடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியதிலிருந்து பின்வாங்கினார். இருப்பினும், அவர் என்.ஆர்.சி.யை எதிர்த்து மாநிலத்தில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.

இந்த புதிய சட்டம் 2014 டிசம்பர் 31 வரை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து நாட்டிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை அளிக்கிறது. இது பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏனெனில், இது பெரும்பாலும் முஸ்லிம்களை விலக்குகிறது. மதத்தின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோரை வகைப்படுத்துவதால் இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Caa amit shah blaming opposition parties spreading misinformation on caa inciting violence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X