Advertisment

குடியுரிமை திருத்தச் சட்டம்: கேரளாவில் இடதுசாரிகளின் முதல் குறி காங்கிரஸ், பா.ஜ.க அல்ல ஏன்?

கடந்த வாரம், சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக சி.பி.எம் இரவு அணிவகுப்புகளை ஏற்பாடு செய்தது. முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு கேரளாவில் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது; இந்து, முஸ்லீம் வாக்குகளுக்கு இடையே காங்கிரஸ் குழப்பத்தில் சிக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi Pinarayi Vijayan

ராகுல் காந்தி - பினராயி விஜயன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ) செயல்படுத்துவது என்பது, 2019 டிசம்பரில் நாடாளுமன்றம் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததில் இருந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியாகும். மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த விதிகளின் அறிவிப்பு , மேற்கு வங்கத்தில் உள்ள மட்டுவாஸ் போன்ற முக்கிய அகதிகள் குழுக்களிடையே கட்சி தனது நிலையை உறுதிப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது இந்திய அரசியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்சிக்கு ஒரு முக்கியமான மாநிலமாகும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: On CAA, Left sees an opening in Kerala, but why is Congress, not BJP, its main target?

ஆனால், தெற்கே கேரளாவில், இந்த சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியது. விதிகளின் அறிவிப்பு எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியது. சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டது. கேரளாவில் சி.ஏ.ஏ-வின் வரம்பிற்குள் வரக்கூடிய தகுதியுள்ள புலம்பெயர்ந்தோர் அதிகம் இல்லை என்றாலும், இடதுசாரிகள் இந்த பிரச்சனையில் அணிதிரண்டுள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக இரவு அணிவகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

சி.பி.எம் மார்ச் 22-ம் தேதி அரசியல் சாசனப் பாதுகாப்பு சமிதியின் பதாகையின் கீழ் கோழிக்கோட்டில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் பேரணியில் உரையாற்றுகிறார். மேலும், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகள் வரும் வாரங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு கேரளாவின் பிற பகுதிகளிலும் நடத்தப்படும். தவிர, 2019 சி.ஏ.ஏ போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான முடிவை இடதுசாரி அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. பதிவு செய்யப்பட்ட 835 வழக்குகளில், கிட்டத்தட்ட 500 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இதில் சுவாரஸ்யமாக, இது சி.ஏ.ஏ.க்கு எதிராக ஒரு வழக்கை உருவாக்குவதால், இடதுசாரிகளின் தாகுதல் வழியில் காங்கிரஸ் இருக்கிறதே தவிர பா.ஜ.க அல்ல. இரு கட்சிகளும் இண்டியா தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், மேற்கு வங்கத்தில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கேரளாவில், அவர்கள் ஒருவருக்கொருவர் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர், எந்தவித விட்டுக்கொடுப்பதற்கும் தயாராக இல்லை.

சி.பி.எம் ஒரு அரசியல் சூதாட்டம் போல, சி.ஏ.ஏ-வை முன்வைப்பது போல தோன்றுகிறது. தமக்கு எதிரான ஆட்சி மீதான காங்கிரஸின் தாக்குதல்களைத் திசைதிருப்பவும், ஆட்சிகு எதிரான எதிர்ப்பை எதிர்கொள்ளவும் மத்தியில் உதவக்கூடும் என்று கருதுகிறது.

சி.ஏ.ஏ-க்கு எதிராக இடதுசாரிகளுடன் கூட்டு சேர்வதால், மாநிலத்தில் இந்து வாக்கு வங்கியில் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது பாஜகவுக்கு நன்மை பயக்கும். அதே நேரத்தில், இடதுசாரிகள் முஸ்லிம் வாக்காளர்களை சிபி.எம்-ஐ நோக்கி மேலும் சாய்ப்பது போன்ற வலுவான நிலைப்பாட்டை எடுக்காததால் காங்கிரஸ் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. 

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கணிசமான வாக்காளர்களைக் கொண்ட வடக்கு கேரளத் தொகுதியான வயநாட்டில் இருந்து ராகுல் காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிடும் விஷயமும் உள்ளது. 2019-ம் ஆண்டில், அவர் அங்கிருந்து போட்டியிடும் முடிவு, மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) அமோக வெற்றி பெறுவதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இதனால்தான், இம்முறை காங்கிரஸின் முன்னாள் தலைவருக்கு அக்கட்சி நெருக்கமான போட்டியை பயிற்றுவிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பினராயி விஜயன் வயநாட்டில் எல்.டி.எஃப்-ன் பிரச்சாரத்தைத் சனிக்கிழமை தொடங்கினார். அங்கு சி.பி.ஐ-யின் அன்னி ராஜா ராகுலின் முக்கிய போட்டியாளராக உள்ளார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா விவாதிக்கப்பட்ட நேரத்தைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி மற்றும் காங்கிரசை பினராயி விஜயன் விமர்சித்தார். “கேரளாவில் இருந்து எழுந்த உரத்த குரல் எல்.டி.எஃப் உறுப்பினரின் (ஏ.எம். ஆரிப்) குரல். மீதமுள்ள 19 (யுடிஎஃப் உறுப்பினர்கள்) அமைதியாக இருந்தனர். ராகுல் ஏதாவது சொன்னாரா? அந்த நேரத்தில் அவர் எங்காவது காணப்பட்டாரா? இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டிற்கு என்ன வித்தியாசம்?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த சில வாரங்களுக்குப் பிறகு கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய சி.ஏ.ஏ எதிர்ப்புத் தீர்மானத்தைக் குறிப்பிட்ட பினராயி விஜயன், அந்த நேரத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், அவர்கள் சி.ஏ.ஏ-க்கு எதிராக இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு செல்லவில்லை என்று கூறினார்.

வயநாடு கூட்டத்திற்கு முன்,  “சி.ஏ.ஏ விதிகளின் அறிவிப்பிற்கு பதிலளிக்க காங்கிரஸ் தயங்குகிறது” என்று குற்றம் சாட்டுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன்  மீண்டும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினார். பினராயி விஜயன் கேட்டார், “பாரத் ஜோடோ நியாய யாத்ராவில், சி.ஏ.ஏ பற்றி அமைதியாக இருந்தது ஏன்? டெல்லி கலவரத்தின் போது (2020, சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் நடந்த இடத்திலிருந்து தொடங்கிய) பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றது இடதுசாரிக் கட்சிகள் இல்லையா?” என்று கூறினார்.

பினராயி விஜயனின் விமர்சனத்தை எதிர்கொண்ட காங்கிரஸ், ராகுல் காந்திக்குப் பின்னால் அணிதிரண்டது. சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் சி.ஏ.ஏ மீதான விவாதத்தின் போது தங்கள் தலையீடுகள் குறித்த விவரங்களை வெளியிட்டனர். காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அக்கட்சி தனது கேரள பிரச்சாரத்தில் தேசியப் பிரச்சினைகளுடன் இடதுசாரிகளின் திறமையற்ற ஆட்சி மீது கவனம் செலுத்தும் என்றார்.

இதற்கிடையில், மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் திங்கள்கிழமை, காங்கிரஸ் ஆட்சிக் குறைபாடுகள் மற்றும் சி.பி.எம் சம்பந்தப்பட்ட ஊழல்களை பாதுகாக்க பினராயி விஜயன் நிர்ணயித்த நிகழ்ச்சி நிரலை காங்கிரஸ் கையில் எடுத்ததாக குற்றம் சாட்டினார். “ஒவ்வொரு நாளும், சி.பி.எம் மற்றும் பினராயி விஜயன் சி.ஏ.ஏ பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே. இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment