சி.ஏ.ஏ வரைவு : இந்தியாவில் குடியுரிமையை பெற மதத்தினை நிரூபிக்க வேண்டும்!

ஜனவரி 10ம் தேதி முதல் சி.ஏ.ஏ நடைமுறைக்கு வந்தாலும் இன்னும் இதற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை மத்திய அரசு.

By: January 28, 2020, 10:11:21 AM

CAA rules applicants must submit proof of religion : ஜனவரி 10ம் தேதி நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம். தற்போது இதன் வரைவு தயாராகிக் கொண்டிருக்கிறது. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்கு முன்பு ஆப்கன், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் தங்களுக்கான குடியுரிமையை தங்களின் மத அடையாளங்களை நிரூபித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதச் சான்றிதழாக இந்திய அரசு டிசம்பர் 31, 2014க்கு முன்பு அவர்களுக்கு அளித்த எந்த சான்றிதழை வேண்டுமானாலும் குடியுரிமை பெறுவதற்கு சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்கள் தாங்கள், இந்து, சீக்கிய, கிறித்துவ, பார்சிய, சமண அல்லது பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த நிர்வாகி “உதாரணத்திற்கு ஒரு குழந்தையை அவர்கள் பள்ளியில் சேர்க்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு அக்குழந்தையின் மதத்தினை அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அல்லது டிசம்பர் 31, 2014ம் தேதிக்கு முன்பு அவர்கள் ஆதார் அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை கூட ஆதரமாக தரலாம். விண்ணப்பதாரர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ள எந்தவொரு சான்றிதழையும் அவர்கள் சமர்பிக்கலாம்.

மேலும் படிக்க : ஜே.என்.யு மாணவர் மீது ஐந்து மாநிலங்களில் தேச துரோக வழக்கு… தேடப்பட்டு வருகிறார் இமாம்!

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் இந்த சட்டத்தின் குடியுரிமை பெறுகின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் மத அடக்குமுறையால் அந்நாட்டினைவிட்டு வெளியேறியதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது அவர்கள் மதரீதியான அடக்குமுறைகளை சந்தித்தற்கான சான்றுகளை கேட்பதற்கு பதிலாக முன்முடிவாகவே அவர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற புரிதலில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தாரின் கோரிக்கை

அசாம் மாநில அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம், குடியுரிமை பெறுவதற்கான காலகேட்டினை 3 மாதங்களாக அறிவிக்க வேண்டும் என்றும், எப்போது வேண்டுமானால் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம் என வைத்தால் அதனால் எதிர்காலத்தில் மேலும் பல்வேறு குழப்பங்கள் நிலவும் என்றும் அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. சி.ஏ.ஏ நடைமுறைக்கு வந்ததில் இருந்து 3 அல்லது 6 மாதங்கள் வரை குடியுரிமையை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று பாஜக தலைவர் ஒருவர் அறிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Caa rules applicants must submit proof of religion

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X