மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை, ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்தது, இது மொத்தம் 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம், அகவிலைப்படி உயர்வுக்கு நிதியளிப்பதற்காக கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: அதானி பங்குகள் சரிவு.. லாபம் ஈட்டிய இன்ஃபோசிஸ்
இந்த நடவடிக்கையால் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
பி.டி.ஐ அறிக்கையின்படி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் ஜனவரி 01, 2023 முதல் அமலுக்கு வரும்.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி இந்த உயர்வு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil