விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்க மத்திய அமைச்சரவை அனுமதி – இஸ்ரோ தலைவர் வரவேற்பு

இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அதிக ஈடுபாட்டை நோக்கி செயல்படும் புதிய அமைப்பை உருவாக்க அரசாங்கம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வரவேற்றுள்ளார்.

By: Updated: June 25, 2020, 05:59:41 PM

விண்வெளித் துறையில் தனியார் துறையினரை அனுமதிக்கும் அமைச்சரவை முடிவை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வியாழக்கிழமை வரவேற்று பாராட்டியுள்ளார். தனியார் துறையினர் அவர்கள் ராக்கெட்டுகளை உருவாக்குதல், ஏவுதள சேவைகளை வழங்குதல் மற்றும்விண்வெளி ஏஜென்சியின் கிரகங்களுக்கு இடையிலான பயணங்களின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற விண்வெளி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அதிக ஈடுபாட்டை நோக்கி செயல்படும் புதிய அமைப்பை உருவாக்க அரசாங்கம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வரவேற்றுள்ளார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், “விண்வெளித் துறை தனியார்களுக்கு திறக்கப்பட்டால், விண்வெளி தொழில்நுட்பத்தின் நன்மைகளை அளவிட முழு நாட்டின் திறனையும் பயன்படுத்தலாம். இது துறையின் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய தொழில்துறை பொருளாதாரத்தில் இந்தியத் தொழில்துறையை ஒரு முக்கிய நாடாக மாற்றஉதவும்” என்று கூறினார். மேலும், இந்த நடவடிக்கை உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக மாறுவதற்கு இந்தியாவுக்கு உதவும் என்றும் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை திறக்கும் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் தொழில்துறை, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிக ஈடுபாட்டை நோக்கி செயல்படும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க அரசாங்கம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. முன்மொழியப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் அல்லது IN-SPACe, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பும் அல்லது இந்தியாவின் விண்வெளி வளங்களைப் பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் இடையே ஒரு ஒற்றை இணைப்பு முகமாக செயல்படும்.

இஸ்ரோ தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வசதிகளையும் IN-SPACe உடன் பகிர்ந்து கொள்ளும் என்று சிவன் மேலும் கூறினார். இஸ்ரோவின் செயல்பாடுகள் குறைக்கப் போவதில்லை என்றும், இது மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கிரகங்களுக்கு இடையிலான மற்றும் மனிதர்களின் விண்வெளி விமானப் பயணங்கள் உள்ளிட்ட நமது விண்வெளி அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அவர் கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கிரக ஆய்வு, மற்றும் விண்வெளி பயன்பாடு யுக்தி போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளில் இஸ்ரோ கவனம் செலுத்த அனுமதிப்பது, அதே நேரத்தில் தனியார் தொழில்துறையினரால் எளிதில் செய்யக்கூடிய துணை அல்லது வழக்கமான வேலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒட்டுமொத்த யோசனையாகும் என்று ஒரு உத்தியோகபூர்வ வட்டாரத்தினர் தெரிவித்தனர். அதே நேரத்தில், தொழில்கள் மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் போன்ற விண்வெளி சொத்துக்களை அதிக அளவில் அணுக அனுமதிப்பது இந்திய விண்வெளி வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும், விண்வெளி தொழில்நுட்பங்களை அதிக அளவில் பரப்புவதற்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cabinets decision to allow private industry in the space sector isro chief k sivan welcomed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X