scorecardresearch

கலைவாணர் அரங்கில் பியூஷ் கோயல்… முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனை

கிண்டி ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால கட்டுமானப் பணிகளையும் துவங்கி வைக்க உள்ளார் பியூஷ் கோயல்

Cabinet minister piyush goyal

Cabinet minister piyush goyal : மத்திய ரயில்வே துறை மற்றும் நிலக்கரித்துறை அமைச்சரான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். இந்த மாதத்தின் துவக்கத்தில் நடத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தினை துவங்கி வைப்பதற்காக அவர் இன்று சென்னை வருகை புரிந்தார்.

பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம்

இந்த திட்டத்தின் மூலம் முதல் தவணைக்கான நிதி பயனாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.  அந்த விழா முடிவடைந்த பின்னர் தெற்கு ரயில்வேயின் என்.எல்.சி சார்பில் 200 கழிப்பறைகளை கட்டும் பணியையும் இன்று துவங்கி வைக்க உள்ளார்.

கிண்டி ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால கட்டுமானப் பணிகளையும் துவங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

தேமுதிகா பாஜகவில் இணைய இணக்கமான சூழல் உருவாகியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் வரும் பியூஷ் கோயல் மீண்டும் விஜயகாந்த்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : விஜயகாந்தை சந்தித்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை செய்து வருகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cabinet minister piyush goyal visit tamilnadu today