Kolkata: மேற்கு வங்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளின் நிலை குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவிற்கு பதிலளித்த ஆலோசகர் (அமிக்ஸ் கியூர்), சிறைக் காவலில் இருக்கும் போது பெண் கைதிகள் கர்ப்பம் தரிப்பது குறித்தும், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் 196 குழந்தைகள் தங்கவைக்கப்படுவது குறித்தும் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு சிறைச்சாலைகளில் நெரிசல் குறித்து தானாக முன்வந்து நீதிமன்றத்தால் ஆலோசராக (அமிக்ஸ் கியூரி) நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தபஸ் குமார் பஞ்சா, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளார்.
இந்த வழக்கு கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சில் வைக்கப்பட்டு, வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. குற்றப் பட்டியல் கொண்ட டிவிஷன் பெஞ்சில் வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞரும் ஆஜராவார். “கற்றறிந்த ஆலோசகர் (அமிகஸ் கியூரி) இந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார் மற்றும் சில தீவிரமான சிக்கல்களைச் சுட்டிக்காட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவலில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பதும், மேற்கு வங்கத்தின் பல்வேறு சிறைகளில் தற்போது 196 குழந்தைகள் இருப்பதும் இதுபோன்ற ஒரு பிரச்சினையாகும்” என்று உயர் நீதிமன்றம் பதிவு செய்தது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், வழக்கறிஞர் தபஸ் குமார் பஞ்சா பரிந்துரைத்த தடுப்பு நடவடிக்கைகளை வாசித்தார். அதில், “கற்றறிவு பெற்ற ஆலோசகர் (அமிக்ஸ் கியூரி), பெண் கைதிகளின் பகுதிக்குள் ஆண் ஊழியர்கள் நுழைவதைத் தடைசெய்யவும், பதிவுசெய்யப்பட்ட பிற பரிந்துரைகளையும் பரிந்துரைக்கிறார். நோட்டின் நகல் ஏற்கனவே அட்வகேட் ஜெனரல் (கிஷோர் தத்தா) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் அனைத்தையும் திறம்பட தீர்ப்பதற்கு, கிரிமினல் ரோஸ்டர் நிர்ணயம் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் இந்த வழக்கு வைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்," என்று பெஞ்ச் தனது உத்தரவில் சேர்த்து, இந்த விஷயத்தை அதன் பட்டியலில் இருந்து விடுவித்தது.
டிவிஷன் பெஞ்ச் முன் தனது குறிப்பில், ஆலோசகர் (அமிகஸ் கியூரி), “பெண் கைதிகள், காவலில் இருக்கும்போது, கர்ப்பம் தரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது. அதைத் தொடர்ந்து சிறைச்சாலைகளுக்குள்ளேயே குழந்தைகள் பிறக்கின்றன. மேற்கு வங்கத்தின் பல்வேறு சிறைகளில் தற்போது 196 குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ளனர்." என்று கூறினார்.
மேலும், அனைத்து பெண் கைதிகளும் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த குறிப்பு தெரிவிக்கிறது. “கற்றறிந்த அனைத்து மாவட்ட நீதிபதிகளும் (பார்வையாளர் குழுவின் தலைவராக இருப்பதால்), அந்தந்த அதிகார வரம்பிற்குட்பட்ட சீர்திருத்த இல்லங்களுக்குச் சென்று, சீர்திருத்த இல்லங்களில் தங்கியிருந்த போது எத்தனை பெண் கைதிகள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியலாம்.
மேலும் அனைத்து பெண் கைதிகளின் கர்ப்ப பரிசோதனையை கண்காணிக்கவும், அவர்களை சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பும் முன், அவர்கள் மீதான பாலியல் சுரண்டலை தவிர்க்கவும், அனைத்து மாவட்டங்களின் கற்றறிந்த தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கலாம். மேற்கு வங்காளத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இதற்கான கர்ப்ப பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்கு இந்த மாண்புமிகு நீதிமன்றத்தால் தேவையான உத்தரவுகள் / வழிகாட்டுதல்கள் வழங்கப்படலாம், ”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 22 அன்று மேற்கு வங்க காவல்துறை (திருத்தப் பணிகள்), சிறப்பு ஆய்வாளர் ஜெனரல் அஜய் குமார் தாக்கூர் முன்னிலையில், ஆலோசகரும் (அமிகஸ் கியூரியும்) அவரது உதவியாளர்களும் கொல்கத்தாவின் அலிப்பூரில் உள்ள மகளிர் சீர்திருத்த இல்லத்திற்கு, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (DLSA) தலைவர் , அலிப்பூரில், தெற்கு 24-பர்கானாஸின் செயலாளருடன் சென்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் தபஸ் குமார் பஞ்சா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேஸ்க்கையில், “எனது வருகையின் போது, பெண் கைதி ஒருவர் கர்ப்பமாக இருப்பதையும், 15 குழந்தைகள் தற்போது அங்கு (கொல்கத்தாவில் உள்ள அலிபூர் கரெக்ஷனல் ஹோம்) வசிப்பதையும் கண்டேன். குழந்தைகள் சிறையில் பிறந்ததாகவும், இது ஐ.ஜி சீர்திருத்த சேவைகள் முன் இருப்பதாகவும் பெண்கள் தெரிவித்தனர். பெண் கைதிகளின் அடைப்புக்குள் சீர்திருத்த இல்லங்களில் பணிபுரியும் ஆண் பணியாளர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் முன் நான் கேட்டுக் கொண்டேன்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.