New Update
00:00
/ 00:00
West Bengal | High Court | மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் வங்காள காட்டு விலங்குகள் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள பெண் சிங்கத்துக்கு சீதா என்றும், ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும் பெயரிடப்பட்டது.
இதற்கு எதிராக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்சில் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) வழக்கு தொடர்ந்து.
சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவில், சிங்கங்களுக்கான அத்தகைய பெயர்கள், “பகுத்தறிவு அற்றவை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை பிப்.20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, “வங்காள சஃபாரி பூங்கா பெண் சிங்கத்திற்கு 'சீதா' என்று பெயரிட்டுள்ளது. சிங்கத்திற்கு ‘சீதா’ என்ற பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் மத உணர்வுகளைப் பூங்கா நிர்வாகம் புண்படுத்தி உள்ளது” என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்பட உள்ள பெயர்கள் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களாக இருத்தல் கூடாது” என உத்தரவிட்டது.
அக்பர் பெயரிடப்பட்ட சிங்கத்திற்கு ஏழு வயது எட்டு மாதங்கள், சீதா பெயரிடப்பட்ட சிங்கத்திற்கு ஐந்து வயது ஆறு மாதங்கள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.