"முஸ்லீம் லீக்கின் கொள்கைகளுடன்" காங்கிரஸ் முன்னேறி வருவதாகவும், "சிறுபான்மையினருக்கான தனிச் சட்டம்" கொண்டுவர திட்டமிட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை கூறினார்.
சத்தீஸ்கரின் பெமேதரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ”சிறுபான்மையினருக்கென தனிச் சட்டம் இயற்றப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளனர். சொல்லுங்கள், ஷரியாவின் அடிப்படையில் நாடு செயல்பட வேண்டுமா? முத்தலாக் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமா?
ராகுல் பாபா, உங்களை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், முத்தலாக் மீண்டும் அமலுக்கு வராது. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), முத்தலாக் மற்றும் சட்டப்பிரிவு 370ஐ, யாரையும் தொட நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ”என்று அவர் கூறினார்.
பெமேதரா, துர்க் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும், இங்கு மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
பாஜகவின் துர்க் வேட்பாளர் விஜய் பாகேலுக்காக பிரச்சாரம் செய்த உள்துறை அமைச்சர், 2023 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகே நடந்த வகுப்புவாத மோதலில் கொல்லப்பட்ட பீரான்பூரில் வசிக்கும் புனேஷ்வர் சாஹுவின் மரணத்திற்கு காங்கிரசை குற்றம் சாட்டினார்.
அவரது தந்தை ஈஸ்வர் சாஹு, எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவர், கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சாஜா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நரேந்திர மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்த அமித்ஷா, பிரதமர் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாத்துள்ளார் என்றார்.
"பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக ஆட்சி கொடுங்கள், இரண்டு ஆண்டுகளில் நக்சலிசத்தை ஒழிப்போம்." சத்தீஸ்கர் காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை சுமார் 80 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் பாகேலை மறைமுகமாக தாக்கி பேசிய அவர், “நரேந்திர மோடி 23 ஆண்டுகளாக முதலமைச்சராகவும் பிரதமராகவும் இருந்துள்ளார், ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை. மறுபுறம், 12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ் மற்றும் UPA தலைவர்கள் உள்ளனர். இப்போது ‘இண்டியா’ கூட்டணியின் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, வாக்கு கேட்கிறார்கள்.
ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் 370 ரத்து செய்யப்பட்டதற்கான உதாரணங்களை கூறிய அமித் ஷா, “ஆயிரம் ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாததை மோடி-ஜி செய்துள்ளார்”.
நான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மசோதாவுடன் நின்றபோது, அதை (பிரிவு 370) நீக்க வேண்டாம் என்று ராகுல் பாபா கூறினார். அப்படி நடந்தால் ரத்தம் ஆறு போல் ஓடும் என்றார். ஐந்து வருடங்கள் கடந்தும் ஒரு கல் கூட எறியப்படவில்லை, என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் குணா மற்றும் ராஜ்கர் மாவட்டங்களில் நடைபெற்ற பேரணிகளில் பேசிய ஷா, "நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது” என்ற பாஜக உத்தரவாதத்தை ஷா மீண்டும் வலியுறுத்தினார்.
“தனி சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. நீங்கள் சொல்லுங்கள், இந்த நாடு ஷரியாவில் இயங்க முடியுமா? பாஜக இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டோம்.
இந்த நாடு பொது சிவில் சட்டத்தால் நடத்தப்படும். இதுவே அரசியலமைப்பின் ஆவி. நாங்கள் உத்ரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தோம், இது எங்களின் உத்தரவாதம், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்று ஷா கூறினார்.
முன்னாள் முதல்வர் திக்விஜய சிங்கைத் தாக்கிய அவர், தனது ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசம் நக்சல் பாதித்த மாநிலமாக கருதப்பட்டது.
டிக்கி ராஜா ராஜ்கரை விட்டு போபால் சென்றுவிட்டார், இன்று அவர் ராஜ்கர் மக்களிடம் வாக்கு கேட்கிறார். டிக்கி ராஜாவின் ஆலோசனையின் பேரில் தான் சிறுபான்மையினருக்கான தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளார், என்று அமித்ஷா கூறினார்.
Read in English: ‘Can country run on Sharia’: Amit Shah claims Congress wants separate law for minorities
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“